முடிவுக்கு வரும் சன் டிவியின் ஃபேவரிட் சீரியல்.. மொத்த ஆட்டத்தையும் க்ளோஸ் பண்ணும் ஜீவா

சன் டிவியில் வரும் சீரியல் தான் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்காக அமைந்திருக்கிறது. அதனால் சன் டிவியில் கிட்டத்தட்ட 18 சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். முக்கியமாக எல்லா வேலையும் முடித்துவிட்டு சாயங்கால நேரத்தில் பார்க்கக்கூடிய சீரியலுக்குத்தான் அதிக வரவேற்பு கிடைக்கிறது.

அந்த வகையில் சாயங்காலம் வரும் சீரியல்களின் கதை சுறுசுறுப்பாகவும் பார்ப்பவர்களை தூண்டும் விதமாகவும் இருக்க வேண்டும் என்று தேர்வு செய்து அதற்கு ஏற்ற மாதிரி நாடகங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சீரியல்களில் ஒரு சீரியல் மக்களின் பேவரிட் சீரியலாக தூக்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த சீரியல் தற்போது முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாயிருக்கிறது. அதாவது அடிமைத்தனமாக இருக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் துணிச்சலையும் கொடுத்து அவர்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று சொல்லும் விதமாக எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு விஷயத்திலும் ஈஸியாக வெற்றி பெற முடியாது.

அப்படித்தான் குணசேகரன், படித்த பெண்களை வீட்டின் மருமகளாக கூட்டி வந்து அடிமைப்படுத்தி வந்தார். அதிலிருந்து தப்பிக்கும் விதமாக ஜனனி மற்ற பெண்களுக்கு ஆதரவாக நின்று குணசேகரனை எதிர்த்து போராட ஆரம்பித்தார். அந்த வகையில் தற்போது ஈஸ்வரியின் நிலைமை கொஞ்சம் பரிதாபமாக இருக்கும் பட்சத்தில் ஜனனி பொருத்தது போதும் இனி இறுதி அத்தியாயத்தை கொண்டு வந்து விடலாம் என்று கிளைமாக்ஸ்க்கு வந்து விட்டார்.

இதுவரை ஆடிய ஆட்டமெல்லாம் போதும் என்று மொத்தமாக முடித்து விடும் விதமாக ஜீவானந்தம் இந்த சீரியலை முடிக்கப் போவதாக தகவல் வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் அதை தாண்டி துணிச்சலுடன் போராட வேண்டும் என்பதற்கு ஏற்ப பல கஷ்டங்களையும் துன்பங்களையும் தாண்டிய எதிர்நீச்சல் பெண்களுக்கு வெற்றி கிடைக்கப் போகிறது. இவர்களை ஆட்டிப் படைக்க நினைத்த குணசேகரன் தண்டனை பெறப் போகிறார்.