முதல் பந்தில் six அடிச்ச விஜய்.. நெருக்கடி கொடுக்கும் பெரியக்கட்சி, தோள் கொடுக்கும் கேரளா

Vijay : என்றுமே ஒரு மனிதனுக்கு முதலில் கிடைக்கும் அபிப்ராயம் என்பது மிகவும் முக்கியம். இந்த முதல் அபிப்ராயத்தை வைத்துதான் சிலர் மனிதர்களை மதிப்பிடுவார்கள். அதுபோலத்தான் விஜய்யும் கட்சி ஆரம்பித்ததிலேர்ந்து இன்று வரை தனது செயலால் மக்களை தன் வசம் வைத்துள்ளார்.

நெருக்கடி கொடுக்கும் பெரியக்கட்சி..

எங்கு இவர் முதலமைச்சர் ஆகிவிடுவாரோ என்ற பயத்திலேயே எதிர்ப்பாளர்கள் மற்றும் பெரியக்கட்சிகள் பயந்து போய் தொடர்ந்து இடையூறு செய்து கொண்டே இருக்கிறார்கள். மாநாடு தேதி மாற்றினார்கள், விஜயை அரசியல் பேசக்கூடாது என்றார்கள், எதெல்லாம் பேச வேண்டும் என ரூல்ஸ் போட்டார்கள்.

தற்போது மாநாட்டுக்கு 5 ஒப்பந்தகார்க்ளிடம் 1.5 லட்சம் நாற்காலிகள் பேசிவைக்கப்பட்ட நிலையில், 4 ஒப்பந்தகாரகள இருக்கைகள் தரமுடியாது என்று பிரச்சினை செய்ய, பிறகு கேரளா நண்பர்கள் இருக்கைகள் கொடுத்து உதவியிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தனியார் பேருந்து மற்றும் சுற்றுலா வண்டிகளை எல்லாம் விஜய் மாநாட்டிற்கு போக கூடாது என்றும் மிரட்டி வருவதாகவும் செய்திகள் பரவுகின்றன. இன்னும் என்னன்ன இடையூறுகள் செய்ய போகிறார்கள் பெரியகட்சிகாரர்கள் என தெரியவில்லை.

முதல் பந்தில் six அடிச்ச விஜய்..

இதெல்லாம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, நீங்கள் என்னே வேணும்னாளும் பண்ணுங்க மாநாடு நடக்கத்தான் போகிறது என்ற நம்பிக்கையில் விஜய் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். மாநாடு நடைபெறும் அன்று சுற்று வட்டாரத்தில் உள்ள 14 டாஸ்மாக்-கள் மூடப்பட உள்ளன.

மாநாடு நடத்தாமல் தனது முதல் பந்தில் six அடித்துள்ளார் விஜய். மாநாடுக்கே டாஸ்மாக் மூடிய விஜய், ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக நல்லது செய்வர் என்ற நம்பிக்கையை இப்போவே விதைத்துவிட்டார். இவரின் இந்த செயல் அனைத்து தமிழ்நாட்டு பெண்களின் மனதிலும் நன்றாக பதிந்துவிட்டது.

மற்றுமொரு ஆச்சரியப்பட வைக்க வேண்டிய விஷயம். நீங்கள் எங்கு வேணாலும் மாநாடு வையுங்கள் நாங்கள் ஆஜர் ஆகி விடுகிறோம் என்று விஜய்யின் கேரளா ரசிகர்கள் மதுரையை நோக்கி படையெடுத்து கொண்டிருக்கிறார்களாம். தமிழகமே இந்த மாநாட்டிற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.