கேப்டன் தமிழ் திரை உலகம் போற்றக்கூடிய ஒரு மனிதர். நடிகர் சங்கத்தை ஒரு குடும்பமாக பாவித்து அவர்களுடைய நல்லது கெட்டதுகளை சரிவர கவனித்துக் கொண்டார். 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தம்முடைய 71ஆவது வயதில் காலமானார்.
போலீஸ் கதாபாத்திரங்களுக்கு இவரை மிஞ்சிய ஆள் கிடையாது என பல படங்களுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, மாநகர காவல், சேதுபதி ஐபிஎஸ் , சத்ரியன் என சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு இவருக்கு போலீஸ் வேடம் கனகச்சிதமாக பொருந்தியது.
இவருடைய வாரிசுகளான சண்முக பாண்டியன் மற்றும், பிரபாகரன் இருவருள் சண்முக பாண்டியன் மட்டும் சினிமாவில் நடித்து வருகிறார். சகாப்தம், மதுரை வீரன், படைத்தலைவன் என இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார். இருந்தபோதிலும் கேப்டன்னுடைய இடத்தை இவர்களால் பிடிக்க முடியவில்லை.
கேப்டன் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ரமணா. இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். ஒரு புதுமையான கான்செப்ட்டை வைத்து லஞ்சத்துக்கு எதிராக இவர் இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது, விஜயகாந்தை விட்டால் அந்த கதாபாத்திரத்தில் யாரும் இல்லை என்பது போல் பொருந்தி இருந்தது ரமணா படம்.
இந்த படத்தை தயாரித்தவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இப்பொழுது அவர் திடீரென கவுன்சிலில் ரமணா2 டைட்டிலை பதிவு செய்துள்ளார். ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் விஜயகாந்தின் வாரிசான சண்முக பாண்டியனை வைத்து ரமணா 2 எடுக்க தயார் என கூறியிருந்தார். கூடிய விரைவில் இரண்டாம் பாகம் வெளிவர உள்ளது,