Vijay : விஜய் கட்சி ஆரம்பித்ததிலுருந்தே தமிழ்நாடு அரசியல் மேலும் ஒரு போர்க்களமாக மாறிவிட்டது. வெளியில் ஆதரவு தெரிவிப்பது போல் என்னதான் பெருமைக்கு பேசித்திருந்தாலும் உள்ளுக்குள் அவ்வளவு வன்மத்தை வைத்துள்ளார்கள் அரசியல்வாதிகள்.
விஜய் தனது இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்தப்போவதாக அறிவித்ததிலிருந்து இன்று வரை எவ்வளவு இடையூறுகளை கடந்தும், சந்தித்தும், சகித்துக்கொண்டும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
தேதியை முன்கூட்டியே வைத்ததால் ஏற்படும் அசம்பாவிதங்கள்..
ஆனால் இவர்கள் முதலில் தேதியை மாற்றியதே விஜய் அவர்களின் முன்னேற்பாடுகளை தடுக்கத்தான். மாநாட்டு திடலை தயார்படுத்தும் வேலையாட்கள் அனைவரும், இரவு பகல் பாராமல் விஜய்க்காக இந்த வேலைகளை 4 நாட்கள் முன்னதாகவே முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் வேலைபார்க்கிறார்கள்.
தற்போது நாளை நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு இன்று கொடிக்கம்பம் நடும் பணி அவசரம் அவசரமாக நடைபெற்றதால், கொடிக்கம்பம் விழுந்து விட்டது, நல்லவேளை உயிர்சேதம் ஏதும் இல்லை, ஆளில்லாத கார் நொறுங்கிவிட்டது. ஏற்கனவே பேசிவைக்கப்பட்ட இருக்கைகள் கைவிரித்தன,நல்லவேளை இறுதி நேரத்தில் கேரளா இருக்கைகளை தந்து உதவியது.
இவ்வாறு மாநாடு தேதி முன்கூட்டியே வைத்தத்தால் நடைபெறும் வேலைகளில் சில சொதப்பல்களும் நடந்துக்கொண்டிருக்கின்றன. இந்த சொதப்பல்களுக்குத்தானே பெரியக்கட்சி மாநாடு தேதியை முன்கூட்டியே வைக்க சொல்லியது என விஜய் தொண்டர்கள் ஆவேசத்தில் உள்ளார்களாம். இப்போது பெரியக்கட்சி பெரும் கொண்டாட்டத்தில் உள்ளதாம்.
இத்தனை இக்கட்டான சூழ்நிலைகளையும் தாண்டி விஜய் மாநாட்டை சிறப்பாக நடத்துவரா? தடையாய் வரும் தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவாரா? நாளை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.