Rajinikanth : ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து போது வில்லனாக நடித்திருந்தாலும், இன்றுவரை அசைக்க முடியாத ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். என்னதான் 75 வயதான நடிகராக இருந்தாலும் ஹீரோ இடத்தை இன்று வரை விட்டு கொடுக்கவில்லை.
அதேபோல் இவரை ஹீரோவை தவிர வேறு எந்த ரோலுக்கு யாரும் அழைத்ததும் இல்லயாம். ரஜினிக்கென்றே உயிரை கொடுக்கக்கூடிய ரசிகர்களுக்கும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
ரஜினியை ஜெயிக்க வைக்க ஏன் இத்தனை மெனெக்கெடல்..
இவரது நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் கூலிப்படம் இன்று மாபெரும் வெற்றி படமாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது நிலவி வரும் கருத்து என்னெவென்றால் ரஜினி படத்தை விஜய் படத்துடன் ஒப்பிட்டுத்தான் இங்கு பெரிய பிரச்சினையே போய்க்கொண்டிருக்கிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இப்போ ப்ளூசட்டை மாறன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது விஜய்யை மிகைப்படுத்தி காமிக்க “சஞ்சய் தத்” என்ற ஒரு பான் இந்திய நடிகர் போதுமானதாக இருந்தார். ஆனால் ரஜினிக்கு மட்டும்தான் இவ்வளவு பான் இந்திய நடிகர்கள் தேவைபடுகிறர்கள் என்று கூறியுள்ளார்.
வேட்டையன் : இப்படத்தில் “அபிதாப் பச்சன்”, “ராணா டகுபட்டி”, “பஹத் பாசில்” ஆகியவர்கள் ரஜினியை மிகைப்படுத்தி காட்ட தேவைப்பட்டார்கள்.
ஜெயிலர் : இந்த படத்தில் “மோகன்லால்”, ஜாக்கி ஷ்ரஃப்” மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர்கள் தேவைப்பட்டனர்.
கூலி : தற்போது வெளியான கூலி படத்திலும் கூட அமீர்கான், நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர் ஆகியவர்கள் ரஜினியை மிகைப்படுத்தி காமிக்க தேவைப்பட்டுள்ளார்கள்.
இதுபோல ஏன் ரஜினியை வைத்து இவ்வளவு மெனெக்கெட்டு படம் எடுக்கிறார்கள். விஜய்க்கு இதுபோன்ற பான் இந்திய நடிகர்கள் தேவைப்படுவதில்லை, பட்ஜெட்டும் அதிகப்படியாக தேவையில்லை வசூலும் நன்றாக இருக்கிறது. பிறகு எதற்காக ரஜினியை இவ்வளவு மெனெக்கெட்டு ஜெயிக்க வைக்க பார்க்கிறார்கள் என ப்ளூசட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.