War 2 : கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ரஜினியின் கூலி மற்றும் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான வார் 2 படங்கள் மோதிக்கொண்டது. இதில் கூலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் வசூல் வேட்டையாடி வருகிறது.
அதே சமயம் வார் 2 படத்தின் தெலுங்கு உரிமையை நாக வம்சி கைப்பற்றி இருந்தார். கிட்டத்தட்ட 80 கோடி கொடுத்து இந்த படத்தை வாங்கினார். காரணம் என்னவென்றால் தெலுங்கில் மிகப்பெரிய நட்சத்திரமான ஜூனியர் என்டிஆர் இந்த படத்தில் நடித்திருந்தது தான்.
இதனால் கண்டிப்பாக படம் தெலுங்கில் மட்டும் 100 கோடியை தாண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் வார் 2 படத்தில் 40 நிமிடங்கள் கழித்து தான் ஜூனியர் என்டிஆர் என்ட்ரி கொடுக்கிறார். அதோடு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியது.
வார் 2 விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
குறிப்பாக ஆந்திராவில் ஜூனியர் என்டிஆர்யை சில கட்சியினர் ஆதரிக்கவில்லை. இது படத்தின் வசூலை மேலும் பாதித்தது. இதன் காரணமாக மிகப்பெரிய நஷ்டத்தை நாகவம்சி சந்தித்திருக்கிறார். இதன் காரணமாக வார் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிவாரணம் கொடுக்க முன் வந்திருக்கிறது.
அதாவது நாகவம்சி மற்றும் அவரது பங்குதாரர்களுக்கு கிட்டத்தட்ட 22 கோடியை திருப்பி தர ஒப்புக்கொண்டு உள்ளனராம். இதனால் நாகவம்சி மிகப்பெரிய நஷ்டத்தில் இருந்து தப்பித்திருக்கிறார். ஆனால் வார் 2 படத்தில் இருந்து அவருக்கு லாபம் கிடைக்க வாய்ப்பில்லை.
சன் பிக்சர்ஸ் தற்போது 500 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி இருக்கிறது. தொடர்ந்து எல்லா மாநிலங்களிலும் வரவேற்பு அதிகமாக கிடைத்து வருகிறது. கூலி படத்துடன் மோதி வார் 2 படம் தான் இப்போது சிக்கி சின்னா பின்னமாகி உள்ளது.