எதிர்நீச்சலில் அறிவுக்கரசி போடும் மர்ம மாத்திரை.. சூழ்ச்சி முடிச்சுகளை பாதி அவிழ்த்த ஜனனி

ஈஸ்வரி தாக்கப்பட்டதை துப்புத் துலக்கி வரும் ஜனனிக்கு துருப்புச் சீட்டு கிடைத்துள்ளது. குணசேகரனும், கதிரும் தான் ஈஸ்வரி  அக்காவை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டார்கள் என நந்தினி கூறுகிறார், ஆனால் கதிருக்கு இதில் சம்பந்தம் இல்லை என ஜனனி தெளிவாக பேசுகிறார்.

 ஜனனிக்கு அறிவுக்கரசி மீது தான் பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  அவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது அதை மறைத்து வைத்திருக்கிறாள் என மர்மத்தை பாதி கண்டுபிடித்து விட்டார்.   குணசேகரன் மற்றும் ஈஸ்வரி இருவருக்கும் நடந்த தள்ளும் முள்ளு அடிதடியை, ரகசியமாக ரெக்கார்ட் செய்யப்பட்டிருந்த வீடியோவை ஏற்கனவே அறிவுக்கரசி பார்த்து விட்டார். 

வீடியோ உள்ள அந்த மொபைலில் இருந்து  வேறு ஒரு மொபைலுக்கு அதை ட்ரான்ஸ்பர் செய்து விட்டார். அந்த வீடியோ தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லப் போகிறது. அந்த மொபைல் கிடைத்து விட்டால் குணசேகரனின் கொட்டத்தை  அடக்கி விடலாம்.

 இப்பொழுது ஜனனிக்கு அறிவுக்கரசி மீது சந்தேகம் வந்துவிட்டது. ரெக்கார்ட் செய்யப்பட்டது ஈஸ்வரியின் மொபைலாகத்தான் இருக்கும் அது மட்டும் கிடைத்துவிட்டால் குணசேகரன் மாட்டிக் கொள்வார். டெலிட் செய்யப்பட்டிருந்தாலும் அதை எடுத்து விடலாம்.

 இதுவரை அந்த வீட்டில் யாரும் ஈஸ்வரியின் மொபைலை பற்றி பேசுவதோ, தேடுவதோ இல்லை. அதுதான் எல்லாத்துக்கும் விடை. மற்றொருபுறம் அறிவுக்கரசி தர்ஷனை வசியப்படுத்த ஏதோ மாத்திரையை கலக்குகிறார். தன் தங்கை மூலம் அதை  தர்ஷன் குடிக்கும்படி செய்கிறார்.