தமிழக அரசியலுக்கு புதிய முகம் விஜய். அரசியல் களத்தில் கால் பதிக்கத் துணிந்த விஜய்க்கு திரையுலகத்தின் மூன்று பெரிய நடிகர்கள்– அஜித் குமார், கமல்ஹாசன், மற்றும் ரஜினிகாந்த் – வாழ்த்து கூறியிருக்கின்றனர்.
அஜித் : முதலில், வினோதமாகத் தோன்றினாலும், இவர்கள் கூறிய வாழ்த்துக்கள் பொதுவாக இருந்தாலும், அதன் பின்னணி மிக முக்கியமானது. அஜித் தனது அடக்கமான இயல்பில், “அரசியலில் களம் காண்பது கடினம். துணிச்சலாக எடுத்த அந்த முடிவுக்கு வாழ்த்து” என தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் : அதை தொடர்ந்து, கமல்ஹாசன் ஒரு மாபெரும் நடிகர் மற்றும் அரசியல்வாதியாக இருந்தாலும் கூட, “தம்பி” என அன்பாக அழைத்து, புதிய அரசியல் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இவர் திமுக கூட்டணியில் இருக்கிறார் என்பதும், தற்போது MP ஆக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஜினி : என்னதான் ரஜினி, விஜய்அரசியலுக்கு வந்தவுடன் ஆதரவு தெரிவித்திருந்தாலும் கூட, சில நாட்களில் தன் பேச்சுக்கள் மூலம் பல மேடைகளில் விஜய் அரசியலை குத்தி காமிப்பது போல் பேசினார். தூண்டுதலின் பேரில் இப்படி பேசினாரா என்பதும் தெரியவில்லை. மிகவும் முக்கியமாக, மீண்டும் ரஜினிகாந்த் கூட சமீபத்தில் இந்த அரசியல் நுழைவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “சாதிக்க வாழ்த்துகள்” என அவர் தெரிவித்ததோடு, இச்செயல் சமூக சேவையை நோக்கிய உண்மையான முயற்சி எனவும் குறிப்பிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
தேமுதிக-வுடன் கூட்டணி..
அதே நேரத்தில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான DMDK உடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே செய்தியை மேலும் பரபரப்பாக்குகிறது. தேமுதிக-உடன் கூட்டணி வைத்தால் வெற்றி நிச்சயம் எனவும் பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்களாம்.
மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் TVK..
இந்த நிலையில், திரையுலக நாயகர்களின் இந்த அளவான உரையாடல் மற்றும் வாழ்த்து தெரிவித்தல், தமிழ்நாடு அரசியலில் புதிய அலைகளை எழுப்பியுள்ளது. அறிமுக அரசியல் நபர் ஒருவருக்காக இத்தனை பெரிய எதிரொலி உருவாகும் என்ற தருணங்களை விஜய் நடத்தியுள்ளார்.
அஜித், கமல், ரஜினி போல இன்னும் பல நடிகர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதுவும் திரையுலக ஹீரோக்களிடமிருந்து நேரடி ஆதரவு போன்ற வாழ்த்துகள் வந்தால், ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் “தமிழக வெற்றி கழகம்” என்பதில் எந்த மாற்றமும் இல்லை.