Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இந்த புரோமோவில் ஆனந்திக்காக ஹாஸ்டல் வார்டன் மனோன்மணியம் மகேஷின் அப்பா தில்லை நாதனை சந்திப்பது போல் காட்டப்பட்டிருக்கிறது.
ரகுவை காப்பாற்றுவதற்காக அன்பு மற்றும் ஆனந்திக்கு பணம் தேவைப்படுகிறது. துளசி, அன்புவின் பண தேவைக்காக தன்னுடைய நகைகளை எடுத்து கொடுக்கிறாள். இதை பார்க்கும் அன்புவின் அம்மா லலிதா அவனை உன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க சொல்.
பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே!
சம்மதம் தெரிவித்து விட்டு அந்த நகையெல்லாம் கொண்டு போகட்டும் என கண்டிஷன் போடுகிறார். அதே நேரத்தில் ஆனந்திக்கு இந்த பண விஷயத்தில் உதவ வேண்டும் என வார்டன் முடிவெடுக்கிறார். இதற்காக தில்லை நாதனை அவர் நேரில் சந்திக்கிறார்.
அதே நேரத்தில் மகேஷின் அம்மா பார்வதியும் அந்த இடத்திற்கு வருகிறார். இவள் எதற்காக உங்களை சந்திக்க வந்திருக்கிறாள். பழைய உறவை புதுப்பிக்க வந்திருக்கிறாளா, அல்லது என்னுடைய மகனை என்னிடம் பறித்துக் கொள்ள வந்திருக்கிறாளா என கேட்கிறார்.
இது தில்லைநாதன் மற்றும் மனோன்மணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. இந்த காட்சிக்கு பிறகு கண்டிப்பாக தில்லைநாதன் மற்றும் மனோன்மணி இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்பது யார் மூலமாகவும் தெரியவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் ரகுவை காப்பாற்ற அன்பு மற்றும் ஆனந்திக்கு யார் பண உதவி செய்கிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.