ஒரே மேடையில் விஜய் உடன் இணைய போகும் 4 உச்ச நட்சத்திரங்கள்.. டபுள் ஓகே சொன்ன ரஜினி

Vijay: தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கும் நடிகர் விஜய், தனது நடிப்புப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளார். இவர் நடித்து வெளியாகவிருக்கும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இந்தப் படம் குறித்து ரசிகர்கள் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட உள்ளது. அந்த விழா சாதாரண இசை வெளியீட்டல்ல, அது ஒரு திரையுலக பிரியாவிடை விழாவாக மாற இருக்கிறது என்பது தான் பெரிய செய்தி.

4 உச்ச நட்சத்திரங்கள்

இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் நாயகர்கள் – ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா ஆகியோர் ஒரே மேடையில் ஒன்றுகூடி விஜய்க்கு மரியாதை செலுத்த உள்ளனர். வழக்கமாக ரே நிகழ்ச்சியில் பங்கேற்காத இந்த முன்னணி நட்சத்திரங்கள், விஜய்க்கு அன்பும் மரியாதையும் செலுத்தும் விதமாக ஒன்றாகும் தருணம், நிச்சயமாக தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு முக்கிய பக்கமாக பதிவாகும்.

பல தலைமுறைகளுக்கு “இளையதளபதி” என்ற பெயரைப் பெற்று தளபதியாக தனது ஆளுமையை நிரூபித்து இருக்கிறார். தற்போது அவர் அரசியலில் களம் இறங்கும் நிலையில், அவரின் சினிமா பயணம் நிறைவடைவதை ஒட்டிய இந்த நிகழ்ச்சி, ரசிகர்களுக்கும், திரைத்துறைக்கும், ஒரு பெரும் உணர்ச்சி மிகுந்த தருணமாக அமையவிருக்கிறது.