Vishal Engagement: நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிந்தால் தான் கல்யாணம் என்று பிடிவாதமாக இருந்த விஷால் சமீபத்தில் நடந்த ஒரு பட விழாவில் அவருடைய காதலியை அறிமுகப்படுத்தும் விதமாக முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும் இவர்கள் இருவருடைய நிச்சயதார்த்தம் வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு கொடுத்திருந்தார்.
அதன்படி விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவிற்கு நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்று வருகிறது. அதாவது 15 வருஷமாக நண்பராக இருந்த பின்னர் காதலாக மாறிய இவர்களின் பயணம், இன்று குடும்பமாக மாறுவதற்கு ஒரு தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஷாலின் ரசிகர்கள் இந்த ஒரு விஷயத்தை கொண்டாடும் விதமாக உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து விஷால் கொடுத்த வாக்கின்படி நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணியும் இறுதி கட்டத்தில் இருப்பதால் கல்யாணத்திற்குள் அதையும் முடித்துவிட்டு சொன்ன வாக்கை காப்பாற்றும் விதமாக கல்யாணத்தையும் முடித்து விடுவார். இதற்கிடையில் முரட்டு சிங்கிளாகவே இருந்து சில சர்ச்சையில் சிக்கிய விஷால் தற்போது பிரமோஷன் வாங்கி குடும்ப வாழ்க்கையில் இணைவதற்கு தயாராகி விட்டார்.



இன்று இவர்களுடைய நிச்சயதார்த்தம் சென்னையில் அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த நிச்சயதாரத்துக்கு இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். அடுத்ததாக இந்த நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு அனைவருக்கும் தடபுடலான விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஜோடிக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.