CWC ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்து துன்புறுத்திய மாதம்பட்டி.. திருமண புகைப்படத்தை வெளியிட்டதன் பின்னணி!

Madhampatty Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிரிசல்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது பூதாகரமாக பற்றி எரிகிறது. திருமணமானது அறிவித்த ஒரே மாதத்தில் இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை என சந்தேகம் எழுந்திருக்கலாம்.

உண்மையில் ஜாய் தன்னுடைய திருமண மற்றும் கர்ப்பத்தை பற்றி பொதுவெளியில் அறிவிப்பதற்கே தனிப்பட்ட காரணம் இருந்திருக்கிறது. அதாவது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய தரப்பில் எந்த நியாயத்தையும் தெரிவிக்காமல் திடீரென ஜாய் இடம் பேசுவதை நிறுத்தி இருக்கிறார்.

அடித்து துன்புறுத்திய மாதம்பட்டி

மேலும் அவரை நேரில் சந்திக்க விடாமல் அவருடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் தடுத்திருக்கிறார்கள். அதையும் மீறி ஜாய் குக் வித் கோமாளி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரடியாக சென்றிருக்கிறார். அங்கு மாதம் பட்டி ரங்கராஜ் அவரை இரண்டு முறை தாக்கி இருக்கிறாராம்.

மேலும் கடைசியாக அவர் ஜாய் இடம் பேசும் போது குழந்தை வேண்டாம், குழந்தையை கலைத்துவிட்டு நாம் இருவரும் ஒன்றாக இருப்போம் என்று தான் சொல்லி இருக்கிறார்.

மேலும் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான் அவரை பிரிந்து இருக்கிறேன் என்று சொல்லி தான் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் இடம் பேசி பழகி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். புகார் கொடுத்த கையோடு விரைவில் மீடியாவை சந்தித்து என்ன நடந்தது என்பதை தெளிவாக சொல்ல இருப்பதாக ஜாய் கிரிசல்டா தெரிவித்திருக்கிறார்.