தீபாவளி என்றாலே பாக்ஸ் ஆபீஸ் யுத்தம்! இந்த 2025 தீபாவளியும் விதிவிலக்கல்ல. நான்கு படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளன. இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான கதைகளையும், முன்னணி நட்சத்திரங்களையும் கொண்டு பண்டிகைக் காலத்தில் மக்களை மகிழ்விக்கத் தயாராக உள்ளன. இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
DUDE
பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே மற்றும் டிராகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு, DUDE படத்துடன் மீண்டும் ரசிகர்களைக் கவர வருகிறார். கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த ரொமான்டிக் ஆக்ஷன் காமெடி படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாகவும், சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர்.
சாய் அப்யங்கரின் இசையும், நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவும் இப்படத்திற்கு பலம் சேர்க்கின்றன. இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படம், தீபாவளி ரிலீஸ் தேதியான அக்டோபர் 17, 2025 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஆதரவுடன் திரையரங்குகளில் வெளியாகிறது.
LIK
LIK படமும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகி வருகிறது. இப்படமும் தீபாவளி அன்று வெளியாகிறது என்ற செய்தி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்து வருகிறது.

பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வருகிறது பைசன் படம். விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த கதைக்களம் கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும் என்று படக்குழு நம்புகிறது.
டீசல்
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் டீசல் படத்தை சண்முகா முத்து சுவாமி இயக்கி இருக்கிறார். நீண்ட காலமாக இந்த படம் தயாரிப்பில் இருந்து வந்தது. இந்த சூழலில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
கார்மேனி செல்வம்
சமுத்திரகனி மற்றும் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகிறது கார்மேனி செல்வம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இரண்டு இயக்குனர்களும் ஒன்றாக நடித்திருப்பதால் படத்தில் மீதான எதிர்பார்த்து அதிகமாக இருக்கிறது.
தீபாவளி பாக்ஸ் ஆபீஸ்
இந்த நான்கு படங்களும் தீபாவளி பண்டிகையை மையமாகக் கொண்டு ரசிகர்களுக்கு ஒரு சினிமா விருந்து படைக்க உள்ளன. DUDE மற்றும் LIK படங்கள் பிரதீப் ரங்கநாதனின் நட்சத்திர மதிப்பால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பைசன் ஆக்ஷன் ரசிகர்களையும், டீசல் மற்றும் கார்மேனி செல்வம் ஆகியவை ஆர்வத்தையும் தூண்டியுள்ளன. இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான கதைக்களங்களுடன் பாக்ஸ் ஆபீஸில் மோத உள்ளன. ரசிகர்களுக்கு இந்த தீபாவளி மறக்க முடியாத ஒரு சினிமா அனுபவமாக இருக்கும் என்பது உறுதி.