Vijay Tv: ஒவ்வொரு வருடமும் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக விஜய் டிவி, அவார்டு நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இப்பொழுது பத்தாவது ஆண்டு விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் முன்னோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வழக்கம் போல் சிறகடிக்கும் ஆசை சீரியல் பெஸ்ட் சீரியல் என்ற விருதை பெறுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து சிறந்த சீரியல் குடும்பம் என்ற விருதை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இதில் வளரும் ஜோடி விருது கதிர் மற்றும் ராஜிக்கு கிடைத்திருக்கிறது. அடுத்ததாக ட்ரெண்டிங் ஜோடி விருதை அய்யனார் துணை சீரியலில் நடித்து வரும் சோழன் நிலாவுக்கு கிடைத்திருக்கிறது.
இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருப்பது மகாநதி சீரியலில் நடிக்கும் காவேரி விஜய்க்கு என்ன விருது கிடைக்கப் போகிறது என்பதை பார்ப்பதற்காக தான். ஏனென்றால் இவர்களை வைத்துதான் விஜய் டிவியில் ப்ரோமோஷன் பண்ணி வருகிறார்கள்.
எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அதற்கு இவர்களை வரவழைத்து பார்ப்பவர்களின் விறுவிறுப்பை அதிகரிக்கிறார்கள். அத்துடன் இவர்களுக்கான நிகழ்ச்சிகளை புதுசாக கொண்டு வந்து டிஆர்பி ரேட்டிங்கை கூட்டுகிறார்கள். அப்படித்தான் இப்பொழுது விஜய் டிவியின் அவார்டு நிகழ்ச்சிக்கு வந்த காவேரி விஜயை வைத்து தந்திரமாக காய் நகர்த்துகிறார்கள்.
அதாவது இவர்களுடைய காதலும் கெமிஸ்ட்ரியும் சீரியலை நன்றாக ஒர்க் ஆகியதால் ரசிகர்கள் VIKA என்று ஆரவாரப்படுத்தி உற்சாகத்தை கொடுத்து வருகிறார்கள். அதனால் இப்பொழுது இவர்கள் இருவருடன் காதலையும் மேடையில் ஒரு டிராமா போல் நடத்தி அதை ரசிகர்களுக்கு காட்டி டிஆர்பி ரேட்டிங் அதிகப்படுத்துகிறார்கள்.
இதனுடைய முன்னோட்டத்தை பார்த்த ரசிகர்கள் இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கும் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் இவர்கள்தான் தற்போது விஜய் டிவியின் பில்லர் ஆக ஜொலித்துக் கொண்டு வருகிறார்கள்.