ரவி மோகன் பந்தாவாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து விட்டார். சமீபத்தில் களைகட்டிய இந்த நிகழ்ச்சி சக்சஸ்ஃபுல்லாக முடிந்தது. ஜெயம் ரவியின் நலம் விரும்பிகள் பல பேர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அடுத்தடுத்து அவரது நிறுவனத்தின் மூலம் பல படங்கள் தயாரிக்கவிருக்கிறார்.
அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதலாவதாக ப்ரோ கோடு என்ற படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடிகள் என்கிறார்கள். முதல் படமே இவ்வளவு பெரிய பட்ஜெட் என்றால் அது சற்று யோசிக்கும்படி இருக்கிறது.
இன்று இருக்கும் நிலவரப்படி ரவி மோகனின் மார்க்கெட் வேல்யூ 25 கோடிகள் தான். சமீபத்தில் சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு எந்த படமும் ஓடவில்லை . கடைசியாக வெளிவந்த காதலிக்க நேரமில்லை படம் மட்டும் ஓரளவு லாபகரமாக போனது.
இவர் நடித்திருந்த காதலிக்க நேரமில்லை படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வாங்கி இருந்தது. அவர்கள் சில பல தந்திரம் செய்து தெரிந்தவர்களிடம் ஒப்பேத்தி விட்டதில் இந்த படம் மூலம் 25 கோடி ரூபாய் ஷேர் கிடைத்ததாம் . இப்படி இருக்கையில் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதல் காலே அகல காலாய் வைக்கிறார் ரவி மோகன்.
பண தேவைகளுக்காக இப்பொழுது இரண்டு படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் ரவி மோகன். சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்திலும், ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வரும் பென்ஸ் படத்திலும் வில்லனாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சாக்லேட் பாய் அந்தஸ்தில் இருந்த அவர் பண தேவைகளுக்காகவும் அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதற்காகவும் வில்லன் அவதாரம் கூட நடிக்க ஆரம்பித்து விட்டார். ஒரு படத்திற்கு வில்லனாக நடிப்பதற்கு 15 கோடிகள் சம்பளம் வாங்குகிறார். ஆனால் அதை எல்லாம் தயாரிப்பு நிறுவனத்தில் போட்டு விட்டு விடக்கூடாது என்பதுதான் அனைவரது விருப்பமும்.