Ayyanar Thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா வீட்டுக்கு வந்த பிறகுதான் வீடு வீடாக இருக்கிறது என்று பல்லவன் ரொம்பவே ஃபீல் பண்ணி பேசுகிறார். நிலா வந்ததும் ஏதோ பொக்கிஷம் கிடைத்தது போல் அந்த வீட்டில் இருப்பவர்கள் ஓவராக பண்ணுகிறார்கள். ஆனால் பாவம் சோழனை யாரும் கண்டு கொள்ளவே இல்லை, புரிந்து கொள்ளவும் இல்லை.
பல்லவன் எதற்கெடுத்தாலும் சோழனை உதாசீனப்படுத்தும் விதமாக பேசி நிலாவை கொண்டாடுகிறார். இதனால் கடுப்பான சோழன், உனக்காக இல்லை என்றாலும் நிலா இங்கே வந்திருப்பாங்க என்று சொல்கிறார். உடனே நிலா ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்ட பொழுது சோழன் நான் கட்டுன தாலி உங்க கழுத்தில் இருக்கிறது. அதற்கு மதிப்பு கொடுத்து நீங்க வருவீங்க நான் எதிர்பார்த்தேன், அதே மாதிரி வந்துவிட்டீர்கள் என்று சொல்லுகிறார்.
இதைக் கேட்டதும் கோபப்பட்ட நிலா கொஞ்சம் கூட யோசிக்காமல் தாலியை கழட்டி சோழன் கையில் கொடுத்து விடுகிறார். இதனால் மொத்தமாக உடைந்து போன சோழன் எப்படியாவது நிலா மனசை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். அதற்காக நிலா ஆபீஸ் போயிட்டு வரும்போது சோழன் கொஞ்சம் கொஞ்சமாக பேசி மனசை மாற்ற வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.
நிலா வந்த பொழுது சோழன் பேச ஆரம்பிக்கிறார், ஆனால் அதற்குள் நிலா நான் உங்களிடம் தனியாக கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்லி ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகிறார். நான் ஒன்று கேட்டால் நீங்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்ட பொழுது சோழன் தாலியை தான் கேட்கப் போகிறார் என்று சந்தோசப்படுகிறார்.
ஆனால் நிலா கேட்டது நம்ம இரண்டு பேரும் சட்டப்படி விவாகரத்து வாங்கிக் கொள்ளலாம். விவாகரத்து பண்ண வேண்டும் என்றால் ஐடி ப்ரூப் எல்லாம் கேட்டிருந்தாங்க. அது இப்பொழுது என்னிடம் இருக்கிறது. உங்கள் மீது எனக்கும் பெருசாக விருப்பமில்லை, உங்களுக்கும் அப்படித்தான். அதனால் நாம் சட்டப்படி பிரிந்து விடலாம் என்று சொல்கிறார்.
தாலியவே கழட்டி கையில் கொடுத்து விட்டேன் இனி விவாகரத்து வாங்கி விட்டால் உங்க வேலையை நீங்க பார்க்கலாம் நான் என் வேலையை பார்த்துக் கொண்டிருப்பேன் என்று சொல்லி சோழனிடம் விவாகரத்து கேட்டு விட்டார். இதை கேட்டதும் சோழன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார்.
ஆனால் ஆரம்பத்தில் இருந்து நிலா சோழனை கண்டு கொள்ளாமல் பேசும் பொழுது பாண்டியன் பல்லவன் சேரனும் வேடிக்கை மட்டும் தான் பார்த்தார்கள். அது மாதிரி இப்பொழுது தாலி கழட்டி கொடுத்தபொழுதும் எதுவும் சொல்லவில்லை, அடுத்து விவாகரத்து கேட்ட விஷயமும் தெரிந்தால் அதற்கும் அமைதியாக தான் இருப்பார்கள்.
ஆனால் சோழன் ஓவராக நிலவிடம் பேச போய் தான் நிலாவுக்கு சோழனின் அருமை தெரியவில்லை. சோழன், நிலவை கண்டு கொள்ளாமல் இருந்தால்தான் நிலாவுக்கு சோழனின் காதல் புரிய வரும்.