OTT ரசிகர்களுக்காக Netflix இந்த செப்டம்பர் மாதத்தை ஸ்பெஷலாக தொடங்குகிறது. செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 5 வரை வெளியாகவுள்ள த்ரில்லர், ஆக்ஷன், மர்மம் நிறைந்த படங்களை இங்கு பார்க்கலாம்.
செப்டம்பர் 3
செப்டம்பர் 3-ஆம் தேதி இரண்டு ஹாட் ரிலீஸ் கள். “Wednesday Season 2 Part-2” (English + Multi Audio) ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சீரிஸ். முதல் சீசனின் மாஸ் வெற்றிக்கு பிறகு, இந்த சீசனின் தொடர்ச்சி எப்படி இருக்கும் என்பது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. அதே நாளில் வரும் “Fall Guy” ஆக்ஷன், எமோஷன் கலந்த English படமும் வெளியாக உள்ளது.
செப்டம்பர் 4
செப்டம்பர் 4-ஆம் தேதி இரண்டு மர்மமான ரிலீஸ்கள். “Strange Frequencies: Taiwan Killer Hospital” (Filipino) – சஸ்பென்ஸ் மற்றும் ஹாரர் கலந்த கதைக்களம். மருத்துவமனை பின்புலத்தில் நடக்கும் சைபர்னெட்டிக் மர்மங்களை பின்தொடரும் இந்த தொடர் த்ரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
அதே நேரத்தில் “Tomb Watcher” (Thai) ஹாரர் வகை படம், கோவில் மற்றும் கல்லறை சார்ந்த மர்மங்களை எடுத்து சொல்லும். இது ஹாரர் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும் என கூறலாம்.
September 5
செப்டம்பர் 5-இல் இந்திய ரசிகர்களுக்காக “Inspector Zende” (Hindi) வருகிறது. போலீஸ், குற்றம், மர்மம் கலந்து வரும் இந்த சீரிஸ் ஹிந்தி ஆடியன்ஸுக்கு நல்ல ஸ்பெஷல். இதே நாளில் “Queen Mantis” (Korean Series) உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. கொரியன் சீரிஸ்கள் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில், இந்த புதிய சீரிஸ் Netflix Top 10 லிஸ்டில் இடம் பிடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.