இந்தியாவின் மிஸைல் மேன் பயோபிக்கில் நடிக்கும் ஹீரோ.. ஆதிபுருஷ் இயக்குநர் சொன்ன தகவல் 

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட “கலம்: த மிஸைல் மேன் ஆப் இந்தியா” என்ற பிரம்மாண்ட வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை “ஆதிபுருஷ்” பட இயக்குநர் ஓம் ரவுத் இயக்குவதாக தகவல் வந்துள்ளது.

கான்ஸ் விழாவில் அறிவிப்பு

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மே 2025-ல் கான்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. அறிவிப்புக்குப் பிறகு தனுஷ், தனது சமூக வலைதளங்களில் அந்த போஸ்டரை பகிர்ந்து, “எங்கள் ஊக்கமூட்டும் தலைவர் டாக்டர் கலாமின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும், ஆழமாகத் தாழ்மையடைவதாகவும் உணர்கிறேன்” என்று எழுதியிருந்தார்.

இந்த பியோபிக் அறிவிப்பு குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் உற்சாகம் நிலவுகிறது. “தனுஷ் கலாம் வேடத்தில் எப்படி இருப்பார்?”, “அவரின் குரலும் பாவனையும் கலாமின் குணநலன்களை வெளிப்படுத்துமா?” என்ற கேள்விகளும் ஆர்வமும் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

இயக்குனரின் பாராட்டு

ஓம் ரவுத், “கலாமின் வாழ்க்கையை சினிமாவாக மாற்றுவது மிகப்பெரிய சவால். எந்த தருணங்களைச் சேர்க்க வேண்டும், எதை நீக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனால் அதை பார்வையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் தருவேன் என்றும் இந்த கதாபாத்திரத்திற்கு தனுஷ் தவிர வேறு யாரும் பொருந்த மாட்டார். அவர் ஒரு அதிசயமான நடிகர்” என்று குறிப்பிட்டார்.

படப்பிடிப்பு இடங்கள்

திரைப்படம், டாக்டர் கலாமின் வாழ்க்கையோடு நேரடியாக தொடர்புடைய ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி போன்ற இடங்களில் படமாக்கப்படுகிறது. தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், “இந்த இடங்களில் உள்ள ஆன்மீக ஆற்றல் மற்றும் வரலாற்றுச் சிறப்பு படத்திற்கு தனித்துவம் தரும்” என்று கூறியுள்ளார்.

திரைக்கதை & தயாரிப்பு குழு

இந்த படத்திற்கான திரைக்கதை, “நீர்ஜா”, “மைதான்” போன்ற வாழ்க்கை வரலாறு படங்களை எழுதிய சாய்வின் குவாட்ராஸ் எழுதியுள்ளார். தயாரிப்பாளர்களாக பூஷன் குமார் (T-Series), அபிஷேக் அகர்வால், கிருஷன் குமார், மற்றும் அனில் சுங்கரா இணைந்து செயல்படுகின்றனர்.

கருப்பொருள் & ஊக்கம்

“Wings of Fire” சுயசரிதை அடிப்படையில் உருவாகும் இந்த படம், கலாமின் சிறுவயது முதல் குடியரசுத் தலைவராக ஆன பயணத்தையும், கல்வி, கண்டுபிடிப்பு, பொறுமை குறித்த சிந்தனைகளையும் வெளிப்படுத்துகிறது. தனுஷின் நடிப்பால் இந்த பயோபிக் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.