Ayyanar thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா விவாகரத்து கேட்டதால் சோழன் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். சோழனின் அமைதி வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. உடனே சோழனிடம் உனக்கும் நிலாவுக்கும் ஏதாவது பிரச்சினை வந்துவிட்டதா என்னவென்று சொல்லு என சேரன்கேட்கிறார்.
அப்பொழுது என் பிரச்சினை என்னவென்று சொன்னால் மட்டும் நீங்கள் தீர்த்து வைக்கப் போறீங்களா, இல்லையென்றால் எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவீர்களா என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன் என்னவென்று சொல்லு அதன் பிறகு பார்க்கலாம் என கேட்கிறார். உடனே நிலா விவாகரத்து கேட்ட விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகிய நிலையில் பல்லவன் அப்படி என்றால் அண்ணி வீட்டை விட்டு போய் விடுவார்களா என்று கேட்கிறார்.
உனக்கு எப்பொழுதும் இந்த கவலை தானா என்று சோழன், பல்லவனிடம் கேட்கிறார். பிறகு இந்த பிரச்சினையை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் அனைவரும் இருந்த பொழுது சோழன் நானே என்னுடைய பிரச்சினையை பார்த்துக் கொள்கிறேன். இன்னும் ஆறு மாதத்திற்குள் சோழன் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று நிலாவை சொல்ல வைக்கிறேன் என்று சவால் விடுகிறார்.
அடுத்ததாக நிலவின் ஆபீஸிலிருந்து ராகவன் மற்றும் நிலாவின் தோழி அனைவரும் வீட்டை பார்ப்பதற்கு வருகிறார்கள். அப்பொழுது ராகவன் நிலாவும் பேசிக் கொள்வதை பார்த்து சோழன் கடுப்பாகிறார். அத்துடன் நிலா, ராகவனிடம் சோழனை அறிமுகப்படுத்தும் பொழுது cousin என்று சொல்லிவிடுகிறார். இதனால் சோழன் டென்ஷன் ஆகிய நிலையில் நிலா மீது கோபப்படுகிறார்.
ஆனாலும் இதுவும் பண்ண முடியாமல் சோழன் தவித்து வருகிறார். அடுத்ததாக பாண்டியன் மெக்கானிக் ஷாப்பில் வானதி வந்து பாண்டியனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது வானதி அப்பா ஆட்டோ ஓட்டிட்டு வரும் பொழுது இருவரையும் பார்த்து வானதியை வீட்டிற்கு கூப்பிடுகிறார்.
வானதி பிடிவாதமாக எனக்கு தான் பாண்டியனை பிடிக்கும் என்று தெரியுமல்ல, தேவையில்லாமல் பிரச்சினை பண்ணாமல் வீட்டுக்கு போங்க. நான் கொஞ்ச நேரம் பாண்டியனிடம் பேசிட்டு வருகிறேன் என்று அடாவடியாக சொல்லி விடுகிறார். இதனால் பக்கத்தில் இருப்பவர்கள் பிரச்சினை என்று கூட்டம் கூடி பார்க்க வந்து விடுகிறார்கள். அந்த வகையில் வானதி காதலுக்கு பிரச்சினை கொடுக்கும் விதமாக வானத்தின் அப்பா ஆப்பு வைக்கப் போகிறார்.
ஆனால் இதையெல்லாம் பார்த்து கவலைப்படாமல் வானதி பாண்டியனிடம் மறுபடியும் பேசுகிறார். பாண்டியன் கொஞ்சம் கூட பயப்படாமல் ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு வானதி எனக்கு என்ன பயம் என்னை பார்த்துக் கொள்ளத்தான் நீ இருக்கே என்று சொல்கிறார். இப்பொழுது இவர்களுடைய காதல் வானதி அப்பாவுக்கு தெரிந்தால் பாண்டியனுக்கு பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது.