தனித்துவமான இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது படங்களால் மட்டுமல்ல, தனது பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில், ‘கூலி’ படத்திற்காக 50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக வெளியான செய்தி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அதை விட ரசிகர்களின் 150 ரூபாய் டிக்கெட் பணம் தனக்கு முக்கியம் என்று கூறிய லோகேஷ், வேறு தோரணையில் பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அதாவது “ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப படம் எடுக்க முடியாது,” என்று அவர் கூறியது, அவரது ‘அந்நியன்’ பாணியில் ஒரு மாறுபட்ட பேச்சாக பார்க்கப்பட்டது.

இதனால் அந்நியன், அம்பி என மாறுபட்ட தோற்றத்தை வைத்து லோகேஷை இணயவாசிகள் கலாய்த்து வருகிறார்கள். படம் வெளியாவதற்கு முன் அம்பி போல பேசினார்.

ஆனால் இப்போது கூலி படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று விட்டது. இதற்கு சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் படம் எடுக்க முடியாது என்று திமிராக பேசியுள்ளார் என்ற கருத்துக்கள் வருகிறது.

லியோ நெகட்டிவ் விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட லோகேஷ் தற்போது கூலி படத்தின் விமர்சனங்களை ஏன் ஏற்க மறுக்கின்றார் என்ற கேள்விகளும் வர தொடங்கி இருக்கிறது.