ஓவர் ஆக்டிங்கில் சொதப்பிய சேரன்.. நிலாவால் அவஸ்தைப்படும் சோழன்

Ayyanar thuani serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா நமக்கு நடந்தது பொய்யான கல்யாணம் என்று சோழனிடம் சொல்லித் தாலியை கழட்டி கையில் கொடுத்து விவாகரத்து கேட்டு நிற்கிறார். அத்துடன் வீட்டிற்கு வந்த ராகவனிடம் சோழனை சொந்தக்கார பையன் என்று சொல்லியதால் சோழன் கடுப்பாகிவிட்டார்.

இதனால் எப்படியாவது நிலமனசை மாற்ற வேண்டும் என்று முடிவு பண்ணிய சோழன், சேரனிடம் இனி நிலா உன்னை அண்ணன் என்று கூப்பிடக்கூடாது. அதை நீ தெளிவாக சொல்லிவிடு என்று கோபமாக சொல்கிறார். உடனே சேரன், நிலா ஆபீஸ் போயிட்டு வீட்டுக்கு வந்ததும் இனி நீ என்னை அண்ணன்னு கூப்பிடாத.

நான் ஒன்னும் உன் கூட பிறந்தவன் இல்லை என்று சொல்கிறார். இதை கேட்டதும் நிலா அழ ஆரம்பித்து ஏன் இப்படி திடீரென்று சொல்கிறீர்கள். எனக்கு நீங்கதான் அம்மா அப்பா அண்ணன் எல்லாமாக இருந்து பார்த்துக் கொள்கிறீர்கள். அதனால் தான் அவர்களை எல்லாம் மறந்து நான் இங்கே இருக்கிறேன். நீங்க ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று அழ ஆரம்பித்து விடுகிறார்.

நிலா அழுவதை பார்த்ததும் சேரன் மனசு மாறிவிட்டது. உடனே சேரன், நிலாவை சமாதானப்படுத்தும் விதமாக நீ அழாதே எப்பொழுதும் நான் தான் உனக்கு அண்ணன். உனக்கு குழந்தை பிறந்தால் நான் தான் தாய் மாமன் சீர் செய்வேன். உன் குழந்தை காது குத்தும் போது என் மடியிலே வைத்து தான் காது குத்தனும்.

நான் மட்டுமில்லை பல்லவன் பாண்டியன் எல்லோரும் உனக்கு அண்ணனாக இருக்கிறோம் என்று சொல்லி எல்லாத்தையும் சொதப்பி விடுகிறார். இதை பார்த்து கோபப்பட்ட சோழனிடம், நீ என்னுடைய தம்பி இல்லை என்று நிலாவுக்கு சொல்லி நான் புரிய வைக்கிறேன் என மறுபடியும் ஒரு ட்ராமா போடுவதற்கு தயாராகி விட்டார்.

அப்படி நிலாவிடம் சோழன் என்னுடைய தம்பி இல்லை என்று சேரனை சொல்லும் போது உடனே நிலா பல்லவனுக்கு ஒரு கதை இருப்பது போல் இவருக்கும் ஒரு கதை இருக்கிறதா? இவருடைய அம்மா அப்பாவும் வேறு ஒருவராய் என்று கேட்க ஆரம்பித்து விடுகிறார். உடனே இது தான் சான்ஸ் என்று சோழன் ஆமாம், என்னுடைய அப்பா அம்மா வேறு என்று சொல்கிறார்.

இதை பார்த்து சேரன் சொதப்பும் வகையில் ஏன் பொய் சொல்கிறாய். நீ என் கூட பிறந்தவன், ஒரே ரத்தம் உனக்கும் எனக்கும் ஒரே அம்மா அப்பா தான் என்று சொல்லி மொத்த பிளானையும் சொதப்பலாக முடித்து விட்டார். இதனால் சோழன் நிலா மனசை மாற்ற முடியாமல் குழப்பத்திலேயே இருக்கிறார்.