Memes : கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் தெரு நாய்கள் தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. சென்னையில் நடந்த “Dog Lives Matter” போராட்டம் முதல் விருதுநகர் மாவட்டத்தில் 30 தெரு நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் வரை, இந்த விவாதம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒரு தரப்பினர் வாதிட, மறுதரப்பினர் “வாக்கில்லா ஜீவன்களுக்கு” ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். இந்த சூடான விவாதத்துக்கு மத்தியில், ஒரு விஷயம் மட்டும் தனித்து நிற்கிறது – பூனைகளுக்கு எந்த பஞ்சாயத்தும் இல்லை!

இதை வைத்து இணையத்தில் தற்போது நாய்-பூனை மீம்ஸ் வைரலாகி வருகிறது.தெரு நாய்கள் பற்றிய பிரச்சனைகள் அடிக்கடி செய்திகளில் இடம்பெற, தெரு பூனைகள் பற்றி பெரிய அளவில் பேசப்படுவதில்லை.

ஒரு வகையில், பூனைகள் தங்கள் சுதந்திரமான இயல்பு மற்றும் “நான் யாருக்கும் அடங்கமாட்டேன்” என்ற மனப்பான்மையால் இந்த பஞ்சாயத்துகளில் இருந்து தப்பித்து விடுகின்றன.

இந்த நாய்-பூனை மீம்ஸ்கள் வெறும் சிரிப்புக்கு மட்டுமல்ல, சமூகத்தில் நடக்கும் விவாதங்களை ஒரு இலகுவான தளத்தில் பேச உதவுகின்றன.

தெரு நாய்கள் மற்றும் பூனைகள் குறித்த வைரல் மீம்ஸ்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்துகின்றன! நாய்-பூனை பஞ்சாயத்து மீம்ஸ்களின் சிரிப்பு ரகளையையும், சமூக விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.