வடிவேலுவை துரத்தி அடிக்கும் கர்மா.. குட்டி கரணம் போட்டு வரும் மாமன்னன்

Vadivelu: சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் ஒண்ணுமே இல்லாமல் இருக்கும் பொழுது சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அடுத்தடுத்த படங்களில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த பொழுது நாகேஷ் சொன்னது பேரும் புகழும் என்னதான் எனக்கு வந்து, நான் உச்சாணி கொம்புக்கு போனாலும் கெட்ட குணங்கள் மட்டும் என்னிடம் வந்து விடக்கூடாது. பழசை மறந்து விடக்கூடாது, நன்றியை மனதில் வைத்துக் கொள்ளணும் என்று கடவுளிடம் வேண்டி இருப்பார்.

அதனால்தான் அவர் சினிமாவில் கடைசிவரை ஜெயித்து நிற்க முடிந்தது. ஆனால் வடிவேல் தன்னை தூக்கி விட்ட வரை மறந்தது மட்டுமல்லாமல், அவரையே அவதூறாக பேசும் அளவிற்கு விஜயகாந்த் பற்றி தவறாக பேசி வந்ததால் என்னமோ வடிவேலுவின் சினிமா சரிய ஆரம்பித்து விட்டது. இதுதான் கர்மா சும்மா விடாது என்று சொல்வார்கள். வந்த வழியை மறந்த வடிவேலுக்கு சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

அதன் பிறகு மறுபடியும் வந்திருந்தாலும் அவருடைய நகைச்சுவை வைத்து ஒன்னும் பண்ண முடியவில்லை என்று சொல்வதற்கு ஏற்ப காமெடி நடிப்பை தொடர வேண்டும் என்று நினைத்த வடிவேலுக்கு தொடர்ந்து வெற்றி கிடைக்காமல் போய்விட்டது. அதன் பிறகு மாமன்னன் மற்றும் மாரீசன் நடிப்பில் முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தாலும் அவர் நடிப்பில் குறை சொல்ல முடியாது என்று பாராட்டும் வகையில் கச்சிதமாகவே நடித்திருந்தார்.

ஆனாலும் இவருக்கான காமெடி மற்றும் பேரும் புகழும் காணாமல் போய்விட்டது. இதனால் எப்படியாவது குட்டிக்கரணம் போட்டாவது மறுபடியும் வந்து விட வேண்டும் என்று ஒவ்வொரு படத்திலும் அவருடைய திறமையை வெளிக்காட்டி வருகிறார். இருந்தாலும் இவருடைய உண்மையான குணம் தெரிந்ததால் மக்கள் இவரை பழைய மாதிரி ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

அதனால் தான் வடிவேலு நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாரிசன் படம் நன்றாக இருந்தாலும் பெரிசாக மக்களிடம் கொண்டாடப்படாமல் போய்விட்டது. இதில் இவருடைய நடிப்பையும் குறை சொல்ல முடியாது, ஆனாலும் வடிவேலு அத்தியாயம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது.