40 ஆண்டுகள் காத்திருந்த கனவு கூட்டணி.. உறுதி அளித்த கமல்!

தமிழ் சினிமாவின் இரு தூண்கள் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன். பல வருடங்களா இவர்களை ஒரே திரையில் பார்க்கும் ஆசை ரசிகர்களுக்குள் இருந்தாலும், அது இதுவரை நடக்கவில்லை.

ஆனால் தற்போது, இயக்குனர் லோக்கேஷ் இயக்கத்தில் இந்த கனவு கூட்டணி நிஜமாகும் வாய்ப்பு இருப்பதாக கமல் ஹாசன் தானே உறுதிசெய்துள்ளார். சமீபத்திய பேட்டியில் கமல் ஹாசன், “ரஜினியும் நானும் அப்போதே சேர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது, அது தாமதமானது.

ஆனால் இப்போது நடக்கும் போது, வியாபார ரீதியில் இது ஒரு பெரிய சர்ப்ரைஸ் ஆக இருக்கும். ரசிகர்களுக்கு பிடித்தால், அதுவே எங்களின் உண்மை வெற்றி” என கூறியுள்ளார். இப்படி மேடையில் பேசிய உடனே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்ந்தது.

ஏனெனில், தமிழ் சினிமா வரலாற்றில் தனித்தனியாக பல சாதனைகள் புரிந்த இருவரும், இப்போது ஒரே படத்தில் கைகோர்க்கும் வாய்ப்பு என்பதே ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம். இயக்குனர் லோக்கேஷ் கனகராஜ் ஏற்கனவே ‘விக்ரம்’, ‘கைதி’, ‘லியோ’ போன்ற படங்களால் தனக்கென தனி பிரபஞ்சம் உருவாக்கியவர்.

அந்த லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் ரஜினி-கமல் சேர்வது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய திருப்பமாக அமையும். இதன் மூலம், இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸிலும் புதிய வரலாறு எழுத வாய்ப்பு இருக்கிறது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில், “இது வாழ்நாள் சாதனை தருணம்”, “ரஜினி-கமல் சேரும் நாளுக்காகவே காத்திருந்தோம்”, “இந்த படம் ஹாலிவுட் ஸ்டாண்டர்டில் இருக்கும்” என பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இப்போது கேள்வி என்னவென்றால் – இந்த கூட்டணி எந்த கதையுடன், எப்போது திரையில் வெளிவரும்? அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.