“96” மூலம் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் பிரேம் குமார். பின்னர் Meiyazhagan மூலம் தனது கதையாக்க திறனை மேலும் நிரூபித்தார். இப்போது அவர் அடுத்தடுத்த திட்டங்களை அறிவித்திருப்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் பிரேம்குமார் கூறியது – தனது அடுத்த 3 படங்கள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரங்களும், கதை சொல்லும் பாணியும் மாறுபடும் என்று தெரிவித்துள்ளார்.
முதலாவது படம், ஒரு Adventure Survival Drama. இதில் முழுப் படத்தையும் சுமக்கும் 9 முக்கிய கதாபாத்திரங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒரு single setup-ல் நடக்கும் கதை என்பதால், சஸ்பென்ஸும், survival போராட்டமும் சேர்ந்து ஒரு gripping அனுபவம் ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது.
இரண்டாவது படம், Action Thriller, இதில் முக்கிய வேடத்தில் Fahadh Faasil நடிக்கிறார். “96” மற்றும் “Meiyazhagan” படங்களுடன் ஒப்பிடும்போது, இதில் கதாபாத்திரங்கள் மிகக் குறைவாக இருப்பதாகவும், அதிரடி, மன அழுத்தம், திரில்லர் பாணியில் ரசிகர்களை உச்சக்கட்ட சஸ்பென்ஸில் வைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது படம், ஒரு Love Story தான். ஆனால் அதில் ஹீரோயின் இருக்க மாட்டார் என்பது தான் மிகப்பெரிய ட்விஸ்ட். பாரம்பரிய காதல் கதைகளில் இருந்து விலகி, காதலை ஒரு புதிய கோணத்தில் சித்தரிக்கப்போகிறார். இதனால், தமிழ் சினிமாவில் சற்றே வித்தியாசமான முயற்சி என்று சொல்லலாம்.
இப்படி மூன்று விதமான படங்களை ஒரே நேரத்தில் திட்டமிடுவது, பிரேம் குமார் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சஸ்பென்ஸும் சுவாரஸ்யமும் தருகிறது. அவர் எப்போதும் கதையை realistic-ஆவும், உணர்ச்சியை ஆழமாகவும் சொல்லுபவர் என்பதால், இந்த மூன்று படங்களும் தனித்துவமானவை என எதிர்பார்க்கப்படுகின்றன.