சினிமாவை தாண்டி ரியாலிட்டி ஷோ மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 9 விரைவில் தொடங்க உள்ளதால் அதற்கான போட்டியாளர்கள் தேர்வு அதிரடியாக நடைபெற்று வருகிறது.
எந்த எந்த Category-யில் போட்டியாளர்களை தயார் படுத்தலாம் என்பது போன்ற ஒரு வியூகத்தை விஜய் டிவி தற்போது எடுத்து வருகிறது. இந்த முறையும் கமலஹாசன் அல்லது சிம்பு பிக் பாஸ் சீசன் 9 ஹோஸ்ட் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது, விஜய் சேதுபதி தான் Bigg Boss Tamil Season 9-ஐ ஹோஸ்ட் செய்யப் போகிறார் என்ற தகவல் சூடாக பேசப்படுகிறது. ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இந்த சீசன் அடுத்த மாதம் அக்டோபர் 5ம் தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியாளர்கள் பட்டியல் (Expected):
2 பிரபல Choreographers, 2 பிரபல Singers, 5 Influencers (Instagram, YouTube), 5 Serial நடிகர்கள், நடிகைகள், YouTube anchors & comedy faces.. இப்படி மாறுபட்ட பின்புலத்திலிருந்து வரும் போட்டியாளர்கள் Bigg Boss வீட்டுக்குள் நுழைந்தால், அங்கே கலவரம், சிரிப்பு, சண்டை எல்லாம் நிரம்பி வழியும் என்பதில் சந்தேகமே இல்லை.
முந்தைய Winners யார் தெரியுமா?
Season 1 – ஆரவ் ,Season 2 – ரித்விகா, Season 3 – Mugen Rao, Season 4 – Aari Arujunan , Season 5 – Raju Jeyamohan , Season 6 – Azeem (சர்ச்சைக்குரியவர் ஆனாலும் ரசிகர்கள் விரும்பியவர்), Season 7 – Archana Ravichandran, Season 8 – Muthukumaran
ஒவ்வொரு சீசனும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி சஸ்பென்ஸும் எமோஷனும் நிறைந்தது. Bigg Boss 9-இல் யார் cup பிடிக்கப் போகிறார் என்ற கேள்வி இப்போதே ஹாட் டாபிக்காகி வருகிறது.
ரசிகர்கள் பக்கா எண்டர்டெயின்மெண்ட் எதிர்பார்க்கும் நிலையில், Bigg Boss 9-இன் ஹோஸ்ட் மாற்றமும், புதிய முகங்களின் லைன்அப்பும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக இருக்கும்.