அனுஷ்காவை காப்பாற்ற போடப்பட்ட இஸட் பிரிவு பாதுகாப்பு.. ஒரே படத்தால் டோட்டலா எண்டான கேரியர்

அனுஷ்கா சமீபத்தில் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. சிங்கம், என்னை அறிந்தால், பாகுபலி என்று வலம் வந்த அவர் இப்பொழுது சினிமாவை விட்டு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 40 வயது நெருங்கியும் அம்மணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தெலுங்கு சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக அசத்தி கொண்டிருந்த இவர் இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2017 – 18 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் முழுக்கு போட்டு விட்டார். கடைசியாக பாகுபலி இரண்டாம் பாகம் மற்றும் பாகமதி போன்ற படங்கள் தமிழில் நடித்தார்.

அதன் பின் கடந்த நான்கு ஆண்டுகளில் தெலுங்கு பக்கம் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இந்த அளவிற்கு இவருக்கு மார்க்கெட் போனதற்கு காரணம் இவர் நடித்த ஒரு படம்தான். 2015 ஆம் ஆண்டு “சைஸ் ஜீரோ” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் கதாபாத்திரத்திற்கு ஏற்ப 60 கிலோவில் இருந்து 90 கிலோவாக வெயிட் போட்டார்.

90 கிலோவில் வலம் வந்து கொண்டிருக்கும் அவரால் இப்பொழுது பழையபடி தன்னுடைய எடையை குறைக்க முடியவில்லை. இப்பொழுது நான்கு வருடங்களில் மூன்று படங்கள் மட்டுமே நடித்துள்ளார். தற்சமயம் ஹாட்டி என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

90 கிலோ எடையுடன் இந்த படத்தில் நடிப்பதால் அவருக்கு சூட்டிங் ஸ்பாட்டில் இஸட் பிரிவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செல்போன்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அவரை கேமரா மட்டும் தான் படம் பிடிக்கும். முழுவதுமாக அவரை மறைத்து தான் காட்சிகளை படமாக்குகிறார்கள்.

படத்தில் அவரை ஸ்லிம்மாக கம்ப்யூட்டர் டிராபிக் தொழில்நுட்பத்தின் மூலம் காட்டப் போகிறார்களாம். இதனால் தான் இத்தகைய பாதுகாப்பு. படம் அடர்ந்த காடுகளில் நடக்கும் கதைக்களமாம். இதனால் 90 கிலோவை எப்படியும் மறைத்து விடலாம் என படக் குழுவினர் அசாத்திய வேலைகளை செய்து வருகிறார்கள்.