தமிழ்நாட்டில் வசூலை வாரிசுருட்டிய 5 மலையாள படங்கள்.. கெத்து காட்டும் லோகா

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும்பாலும் தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்தாலும், சமீப காலங்களில் மலையாள படங்களுக்கு தமிழகத்தில் கிடைக்கும் வரவேற்பு ஆச்சரியமாக உள்ளது. பல படங்கள் சின்ன சின்ன ரிலீஸ்களாக வந்தாலும், word of mouth மற்றும் தரமான கதைக்களத்தால் பெரிய வசூலை எடுத்து வருகின்றன.

மஞ்சுமல் பாய்ஸ் (Manjummel Boys) இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சினிமா ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்த இந்த படத்துக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது. 64.10 கோடி வசூல் செய்து, மலையாள படங்களுக்கு தமிழகத்தில் கிடைத்த வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

அடுத்து, லோகா சாப்டர் 1 (Lokha Chapter-1). லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸுக்கே சற்றே ஒத்திருக்கும் தீம், மாஸ் ட்ரீட்மென்ட் ஆகிய காரணங்களால் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் 13.6 கோடி வசூல் செய்து பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மொத்தமாக 100 கோடி வசூலை தாண்டி உள்ளது.

ஆவேசம் (Aavesham) மற்றும் பிரேமலு (Premalu) ஆகிய இரண்டு படங்களுமே தமிழகத்தில் ஒரே அளவான வரவேற்பைப் பெற்றன. இரண்டும் 10.75 கோடி வசூல் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளன. குறிப்பாக பிரேமலு படம் தமிழ் இளைஞர்களிடையே காமெடி, ரொமான்ஸ் கலந்த கதையால் ஹிட் ஆனது.

எம்புரான் (Empuran) படம், எதிர்பார்ப்புக்கு ஏற்ப பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், தமிழகத்தில் 9.30 கோடி வசூல் செய்து மலையாள படங்களுக்கான ரசிகர் அடிப்படை எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை காட்டியுள்ளது.

இவ்வாறு, மஞ்சுமல் பாய்ஸ், லோகா சாப்டர் 1, ஆவேசம், பிரேமலு, எம்புரான் ஆகிய படங்கள் தமிழகத்தில் மாபெரும் வசூலை ஈட்டியுள்ளன. இது, நல்ல கதைக்களம், சிறந்த நடிப்பு, தரமான சினிமா என்றால் மொழி, பிராந்தியம் பாராமல் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கே சான்று.