சூட்டிங் ஸ்பாட்டில் தனுஷ் செய்யும் அக்கப்போரு.. சைடு கேப்பில் யோகி பாபு ஓட்டும் குதிரை

தற்போதைய காலகட்டத்தில் ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் தயாரிப்பாளர்களுக்கு நாக்கு தள்ளி விடுகிறது. ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டுமானால் குறைந்தது 300 கோடிகள் இருந்தால்தான் ஒரு மினிமம் பட்ஜெட்டில் படம் எடுக்க முடியும்.

மற்ற மொழிகளை ஒப்பிட்டு பார்த்தால் தமிழ் சினிமாவில் தான் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் அதிக சம்பளம் வாங்குவாங்குகிறார்கள். அஜித், விஜய், ரஜினி இவர்களெல்லாம் 100 கோடிகளுக்கு மேல் ஒரு படத்திற்கு வாங்கி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காகவும் பல கோடிகளை செலவழித்து வருகிறார்கள்.

இப்படி இவர்கள் சம்பளம் ஒரு பக்கம் இருக்கையில் தனுஷ் மற்றும் யோகி பாபு செய்யும் அக்கப்போர்கள் அதற்கு மேல் இருக்கிறது. சூட்டிங் ஸ்பாட்டில் இவர்களுக்கு வேண்டியவற்றை செய்து கொடுக்கும் பணிகளை செய்வதற்காக சில ஆட்களை கூடவே கூட்டி வருகிறார்.

தனுஷ் கடந்த சிலநாட்களாக 22 ஆட்களோடு தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகிறாராம். இவரை பாதுகாத்துக் கொள்வதற்காக பவுன்சர்களும், மேக்கப், மற்றும் சமையல் காரர்கள் என இவருடன் ஒரு பெரிய கும்பலே வருகிறதாம்.

தனுஷ் எப்பொழுதும் வீட்டு சாப்பாடு தானாம் . அதனால் சமையல் செய்வதற்காகவே இரண்டு மூன்று ஆட்களை கூட்டி வருகிறார், அதைப்போல் அரை டசன் ஜிம் பாய்ஸ், டச் அப் , காஸ்ட்யூம் டிசைனர் என ஏகப்பட்ட கூட்டம்.

அது மட்டுமில்லாமல் இவரிடம் வேலை செய்யும் காஸ்டியூம் டிசைனர், அவருக்கெனதனியாக மூன்று அசிஸ்டன்ட் வைத்திருக்கிறாராம். இப்படி தனுஷ் ஒரு பக்கம் செய்கையில்யோகி பாபுவும் இவரைபோல் தன்னுடன் 15 பேர் கொண்ட கும்பலுடன் தான் வருகிறாராம்.