தெரியாம லோகேஷ் கனகராஜ் படத்துல நடிச்சிட்டேன்.. சம்பாதித்த மொத்த பெயரும் போச்சுன்னு புலம்பும் சூப்பர் ஸ்டார்

பான் இந்தியா ஆர்டிஸ்ட்களோடு ஆரவாரமாய் வெளிவந்தது சூப்பர் ஸ்டாரின் கூலி படம். கிட்டத்தட்ட 600 கோடிகள் வசூலித்து விட்டது என செய்திகள் வெளிவந்தாலும் இந்த படத்தில் நடித்தது, தான் செய்த தப்பு என புலம்பி வருகிறார் ஜாம்பவான் ஒருவர்.

நாகர்ஜுனா, சௌபின் ஜாகீர், உபேந்திரா, பாலிவுட்டில் இருந்து அமீர்கான் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு வெளிவந்தது கூலி படம். லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி என்பதால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு.

ஆரம்பத்திலிருந்து இந்த படத்திற்கு ஒரு பெரிய ஹைப் உண்டானது. படம் ரிலீஸ் ஆன பின்பு இது வழக்கமான லோகேஷ் படம் வேறென்றும் புதிதாக இல்லை என விமர்சனங்கள் வந்தது. ஆனால் படம் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றுக் கொடுத்தது.

இப்பொழுது இந்த படத்தில் நடித்து ஏமாந்து விட்டேன் என பாலிவுட் ஜாம்பவான் அமீர் கான் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். படம் ரிலீசுக்கு முன்னர் இவருடைய கேமியோ ரோல் பெரிதும் பேசப்பட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆனவுடன் மவுஸ் இல்லாமல் போனது.

இதைப் பற்றி அமீர்கான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காகத்தான் இந்த படத்தின் கதையையும், தன்னுடைய கதாபாத்திரம் பற்றியும் எதுவும் கேட்கவில்லை. லோகேஷ் கனகராஜ் பற்றி ஏற்கனவே தெரியும். ஆனால் படம் ரிலீஸ் ஆன பின்பு என்னுடைய கேமியோ ரோல் எடுபடவில்லை என வெளிப்படையாக கூறியுள்ளார்.

பாலிவுட்டில் இவர் இந்த கதாபாத்திரம் செய்ததற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதாம். இவரின் கதாபாத்திரம் நன்றாக இல்லை என அங்கே ரசிகர்கள் போர்க்கொடி பிடித்து வருகிறார்கள். அமீர்கான் நடித்த தாகா கதாபாத்திரத்தை பெரிதாக காட்டிவிட்டு கடைசியில் ஒன்றும் இல்லாமல் பண்ணிவிட்டாராம் லோகேஷ்.