அஜித் கொடுத்த ஆதரவால் விஸ்வரூபம் எடுக்கும் நடிகர்.. அடுத்த ரகுவரனாக மார்தட்டும் ஜானி தம்பி

ரகுவரன் இடத்தை இன்றுவரை நிரப்புவதற்கு ஆள் இல்லாமல் தமிழ் சினிமா கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது. வில்லனிசம் பண்ணுவதில் இவரை மிஞ்ச ஆள் கிடையாது. படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் ரகுவரன் இல்லாதது தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு.

சைக்கோ தனமாகவும் சரி, அதிரடி காட்டும் பாட்ஷா ஆண்டனியாகவும் சரி ரகுவரனுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதை போல் தனித்துவமான அவர் குரலையும் யாராலும் மறக்க முடியாது.

கிட்டத்தட்ட ரகுவரன் போலவே குரலில் மிரட்டும் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஜானி மற்றும் ஜாமி கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். பொதுவாக அஜித் குமார் போல பெரிய ஹீரோவிற்கு மிரட்டலான வில்லன் தேவைப்படும் ஆனால் இவர் அந்த கதாபாத்திரத்தை அசால்டாக செய்திருந்தார்.

இப்பொழுது குட் பேட் அக்லி படத்திற்குப் பின்னர் இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அடுத்தடுத்த அரை டஜன் படங்களில் கமிட்டாகியுள்ளார். ஆரம்பத்திலிருந்து ரகுவரன் போல் ஒவ்வொரு படத்திற்கும் இவர் வித்தியாசம் காட்டி வந்தார்.

இப்பொழுது பாம் என்ற ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அதுவும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அன்றிலிருந்து தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்து தானே வருகிறார்.

அதன் பின்னர் மற்றும் ஒரு லோகேஷ் படம் மாஸ்டரில் சீர்திருத்தப்பள்ளி வில்லனாக தாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜன் விக்ரம் படத்திலும் எல் சி யு வில் மீண்டும் தோன்றினார். இனிவரும் காலகட்டங்களில் ரகுவரன் இடத்தை இவர் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.