5 பாலிவுட் நடிகர்கள் கெஸ்ட் அண்ட் வில்லன் ரோலில் மோசம்போன படங்கள்.. வெளிப்படையாய் சொன்ன விஜய் டாடி

பான் இந்தியா படம் என்ற பெயரில் பாலிவுட்டில் இருந்து 5 முன்னணி ஹீரோக்களை கூட்டி வந்து தமிழில் வச்சு செய்துள்ளனர். அப்படி நடித்த நடிகர்கள் இந்த படத்தில் ஏன் நடித்தோம் என யோசிக்கும்படி அமைந்த கதாபாத்திரங்களை இதில் பார்க்கலாம். ஐந்து பேரும் வெளிப்படையாய் கூறி தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஜாக்கி ஷெராப்: பிகில் படத்தில் இவர்தான் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். ஆனால் இவரது ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அட்லிக்கு இந்த படம் சூப்பர் ஹிட் ஆக அமைந்த போதிலும் ஜாக்கி ஷெராப் இதில் நடித்ததற்காக இப்பொழுது யோசித்து வருகிறார்.

அமீர்கான்: சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் தாகா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அமீர்கான். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் எடுபடவில்லை. மிகவும் காமெடியாக அமைந்திருந்தது. அமீர் காணும் அவரது ரசிகர்களும் படம் ரிலீசுக்கு பின் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

சஞ்சய் தத்: விஜய்யின் லியோ படத்தில் அப்பாவாக முக்கியமான வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். படத்தில் இவரை மூடநம்பிக்கைக்கு அடிமையான ஒரு ஆளாக காட்டியிருந்தனர். இது அவருக்கு பிடிக்கவில்லையாம். இவரது ரசிகர்களும் இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ளவில்லையாம். சஞ்சய் தத்தும் தனக்கு பிடிக்கவில்லை என கூறியிருந்தார்.

பாபி தியோல்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் கங்குவா. இந்தப் படம் மோசமான ஒரு பெயிலியர் படமாக அமைந்தது. பாபி தியோல் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்ததால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ரசிகர்கள் மத்தியில் படம் எடுபடவில்லை. ட்ரெய்லரில் காட்டிய அளவுக்கு பாபி தியோல் கதாபாத்திரம் எடுபடவில்லை.

விவேக் ஓபராய்: அஜித் நடித்த விவேகம் படத்தில் விவேக் ஓபராய் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். ஆனால் படத்தில் பெரும்பாலும் ஹீரோ புகழ் பாடும் துதியை மட்டுமே பேசிக் கொண்டிருப்பார். ஒரு வில்லனுக்கு உரிய எந்த தகுதியும் அவருக்கு அந்த படத்தில் இல்லாதது போல் அவருக்கே தோன்றியதாம்.