தனுஷ் பேச்சால் கலவரமான ஆடியோ லான்ச்..  இது என்னடா இட்லி கடைக்கு வந்த சோதனை

சமீபத்தில் நடைபெற்ற “இட்லிக்கடை” படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி, ரசிகர்களுக்குப் பெரிய கொண்டாட்டம் போலவே இருந்தது. படக்குழுவும், ரசிகர்களும் காத்திருந்த நிகழ்ச்சியில், ஹீரோ தனுஷின் உரை தான் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. ஆனால் அந்த உரையில் அவர் கூறிய சில வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு காரணமாகி விட்டது.

தனுஷின் பேச்சு என்ன?

முதலில், அவர் சொன்ன விஷயத்தைப் பார்ப்போம். தனுஷ் தனது பயணத்தைப் பற்றி, தனது ஸ்ட்ரகிள்ஸை நினைவுகூர்ந்து பேசினார். “இன்று நான் இங்கு வந்திருக்கிறேன், ஆனால் இதற்கு முன்னால் என்னோட வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள், கஷ்டங்கள் வந்திருக்கிறது என்று எனக்கு மட்டுமே தெரியும். நான் எங்கேயிருந்து வந்தேன், என்ன hardships கடந்து வந்தேன், அதற்கான மதிப்பு இன்று தான் கிடைக்கிறது” என்று அவர் கூறினார்.

அவரது இந்த உரை, உண்மையில் அவரின் வாழ்க்கை அனுபவத்தை நினைவுபடுத்தும் விதமாகவே இருந்தது. ஆனால் சிலர் அதை வேறு விதமாக எடுத்துக்கொண்டு, சமூக வலைதளங்களில் “இது unnecessary drama” என்று விமர்சிக்க தொடங்கினர்.

10 வருடங்களுக்கு முன் யாரும் பேசவில்லையே?

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 10 வருடங்களுக்கு முன்பே தனுஷ் இதே மாதிரியான விஷயத்தைச் சொல்லிஉள்ளார். அப்போது எந்தவிதமான சர்ச்சையும் கிளம்பவில்லை. ரசிகர்களும், பொதுமக்களும், அவருக்கு simply அன்பு, support மட்டுமே தந்தார்கள்.

ஆனால் இன்று, அதே விஷயத்தை அவர் சொன்னபோது, சிலர் அதை பெரிய பிரச்சனை போல மாற்றுகிறார்கள். “அந்த நேரத்தில் எந்த noise-யும் இல்லையே, இப்போது எதற்கு இவ்வளவு எதிர்ப்பு?” என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

சர்ச்சையின் காரணம் என்ன?

இணையத்தில் பலரும், “தனுஷின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத சிலர்தான் இந்த unnecessary drama-வை உருவாக்குகிறார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளனர். அவர் இந்தியாவிலேயே மட்டும் அல்லாமல், ஹாலிவுட் (The Gray Man) வரை சென்று நடித்திருப்பது, பிரம்மாண்ட project-களை கையில் வைத்திருப்பது – இவை எல்லாம் சிலருக்கு பொறாமையாக இருக்கிறது என்பதே ரசிகர்களின் வாதம்.

மேலும், “தனுஷ் unique ஆன கதைகளை தேர்ந்தெடுக்கிறார், தனக்கென ஒரு brand of cinema உருவாக்கியிருக்கிறார். இதையே சிலர் ஏற்றுக்கொள்ள முடியாமல், அவரை target பண்ணுகிறார்கள்” என்கிறார்கள். இந்த சர்ச்சை கிளம்பியவுடன், தனுஷின் ரசிகர்கள் அவருக்கு முழு ஆதரவாக களமிறங்கினர்.

Twitter, Instagram எல்லாம் #WeStandWithDhanush, #IdliKadai போன்ற ஹாஷ்டேக்குகளால் நிரம்பியது. “Unless you’ve lived his journey, you’ll never understand his struggles. Think before you speak” என்ற வாசகங்கள் வைரலாக பரவி, ரசிகர்கள் அவரின் வாழ்க்கை பாதையை defend செய்தனர்.

சமூக வலைதள விவாதம்

இந்த சம்பவம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை கிளப்பியது. சிலர், “தனுஷ் எப்போதுமே real பேசுபவர். அவர் fake show பண்ண மாட்டார்” என்று ஆதரிக்க, சிலர் “இவ்வளவு பெரிய ஸ்டாராகிவிட்ட பிறகு, மீண்டும் மீண்டும் struggles-ஐ பேச வேண்டாமே” என்று எதிர்ப்பை தெரிவித்தனர்.

Idly kadai audio launch

ஆனால், பெரும்பாலான நடுநிலை ரசிகர்கள், “அவர் சொன்னது தவறில்லை. ஆனால் அதை unnecessarily பெரிய வாக்குவாதமாக்கியிருக்கிறார்கள்” என்று சொல்கிறார்கள். “இட்லிக்கடை” ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் தனுஷ் சொன்ன உரை – உண்மையில் அவர் வாழ்க்கையின் உண்மையை வெளிப்படுத்தும் ஒரு நேர்மையான முயற்சி தான்.

ஆனால் அது சமூக வலைதளங்களில் unnecessary சர்ச்சை ஆனது. 10 வருடங்களுக்கு முன்பு இதே வார்த்தைகளைப் பேசும்போது மக்கள் அன்பு மட்டும் கொடுத்தார்கள். இன்று, சிலர் அதை hatred spread செய்யும் tool-ஆக பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், ரசிகர்கள் ஒருமித்த குரலில் சொல்வது: தனுஷ் எப்போதுமே நம்ம hardwork-ஐ represent பண்ணுறார். அவர் struggles தான் அவரை இன்று international level-க்கு கொண்டு சென்றது. அதனால், அவர் சொல்வது real – அதைத் தவறாக பார்க்கவே வேண்டாம்.