தமிழ் சினிமா உலகில் தனுஷ் என்ற பெயர் பிரபலமானது. மிகுந்த திறமையும், சுறுசுறுப்பு வாய்ந்த நடிப்புத் திறனாலும் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனராகவும் பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது வரை 50க்கும் மேலாக படங்களில் நடித்திருக்கிறார்.
இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா
இப்பொழுது இட்லி கடை என்ற படத்தை இயக்கி, கதை எழுதி, நடித்து, தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இதில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவரப் போகிறது.
இதற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் தனுஷ் சில விஷயங்களை உருக்கமாக பேசி கடந்து வந்த பாதையை கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த டிடி, தனுஷிடம் கருங்காலி மாலை பற்றி ரகசியம் என்ன என்று கேள்வி கேட்டார். அதற்கான ரகசியத்தை சொல்லும் விதமாக தனுஷ் சென்டிமெண்டாக பதில் கூறியிருக்கிறார்.

செண்டிமெண்டாக தனுஷ் சொன்ன விஷயம்
அதாவது இது என்ன மாலை என்று எனக்கு சத்தியமாக தெரியாது, என்னுடைய தாத்தாவின் போட்டோவுக்கு முன்னாடி இந்த மாலை தொங்க போட்டு இருந்தது. அப்பொழுது என்னுடைய பாட்டியிடம் நான் இது என்ன மாலை என்று கேட்டேன். அதற்கு என்னுடைய பாட்டி, தாத்தா 30 வருஷமாக ஜபித்த மாலை என்று சொன்னார்.
உடனே எனக்கு இந்த மாலை வேண்டுமென்று கேட்ட பொழுது என்னுடைய பாட்டி என்னை கூட்டிட்டு போய் தாத்தா படத்துக்கு முன்னாடி நிற்க வைத்து அதை கழட்டி எனக்கு போட்டு விட்டார். அதைத்தான் நான் கழுத்தில் போட்டிருக்கிறேன். ஆனால் இந்த மாலை போட்டதற்கு பிறகு எனக்கு சக்தியும் நிதானமும் வெற்றியும் கிடைக்கிறது என்று ஒரு நம்பிக்கை.
அதனால் தொடர்ந்து போட்டிருக்கிறேன் என்று தனுஷ் அவர் போட்டிருக்கும் கருங்காலி மாலை பற்றி ரகசியத்தை அனைவரது முன்னாடியும் தெரியப்படுத்தி இருக்கிறார். தனுஷ் என்னதான் தாத்தா போட்டிருந்த மாலை என சொல்லியிருந்தாலும் பலரும் கருங்காலி மாலை போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு சீசன் என்று சொல்வதற்கு ஏற்ப சிவகார்த்திகேயன், லோகேஷ்,
விஷ்ணு விஷால் மற்றும் பலர் நடிகர்கள் போட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.