தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான தளபதி விஜய், கடந்த சில மாதங்களாக அரசியல் உலகத்தில் நுழைந்து தலைப்பு செய்தி ஆகி வருகிறார். ரசிகர்களும் அரசியல் வட்டாரங்களும் கேட்கும் முக்கிய கேள்வி – “விஜய் ஏன் அரசியலுக்கு வந்தார்? இவரை யார் இயக்குகிறார்கள்? இவரின் வெற்றி chances என்ன?”
விஜய்-யின் அரசியல் பயணம், அவரின் conferences, promises, DMK-AIADMK மீது உள்ள தாக்கம், 2026 தேர்தல் outcome, மேலும் திரும்ப சினிமாவுக்கு போவாரா என்ற கேள்வி வரை அனைத்தையும் விரிவாக பார்க்கலாம்.
விஜய் அரசியலுக்கு வந்த காரணம்
விஜய் சினிமாவில் 30+ ஆண்டுகளாக leading star. Master, Leo, Varisu போன்ற படங்கள் Box Office-ல் பெரும் வெற்றி பெற்றன. ஆனால், அவரது ரசிகர் மன்றம் 2000-களில் இருந்தே சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தது.
- கல்வி உதவி ,மருத்துவ சேவை , சமூக upliftment
இது gradually ஒரு political groundwork-ஆக மாறியது. முக்கிய காரணங்கள்:
- ரசிகர்களின் continuous pressure – “நீங்கள் அரசியலுக்கு வரணும்”. , DMK–AIADMK மீது மக்கள் மனதில் ஏற்பட்ட dissatisfaction. விஜய்-யின் stardom-ஐ political power-ஆக மாற்றும் முயற்சி.
யார் விஜயின் பின்னால் உள்ளனர்?
இது மிகப்பெரிய கேள்வி. அரசியல் analyst-கள் சொல்லுவது:
விஜய்-யின் close circle-ல சில retired bureaucrats, political strategists இருக்கிறார்கள். Election strategy, booth-level planning எல்லாம் அவர்களைச் சுற்றியே நடக்கிறது. சிலர், “விஜய்-யின் பின்னால் காங்கிரஸ் அல்லது BJP இருக்கிறதா?” என்று கேட்கிறார்கள். ஆனால் இது குறித்து எந்த official proof-ம் இல்லை. அரசியலில் கரை கண்ட சகாயம் ஐஏஎஸ், பழ கருப்பையா, சிலை கடத்தலை தடுத்து நிறுத்தி புகழ்பெற்ற பொன்மாணிக்கவேல் போன்ற நேர்மையான அதிகாரிகளும் விஜய்-யை சுற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
சினிமாவில் அவர் decisions எடுப்பது போலவே, அரசியலிலும் final decision அவர் தான் எடுக்கிறார் என்பதுதான் தற்போதைய நிலை.
கடந்த இரண்டு மாநாடுகள் – வெற்றி? தோல்வி?
விஜய் நடத்திய மாநாடுகள் (public meetings) பற்றி mixed reactions வந்தன.
- Positive side: பெரிய கூட்டம், ரசிகர்களின் உற்சாகம், சமூக ஊடகங்களில் trending.
- Negative side: சில இடங்களில் கூட்டம் குறைவாக இருந்தது, ground-level political impact குறைவாக இருந்தது.
Analysts சொல்வது – “விஜய் –யின் மாநாடுகள் fans gathering மாதிரி தான் இருந்தது, ஆனால் அதை vote-ஆக மாற்றுவது தான் பெரிய சவால்.”
தேர்தல் வாக்குறுதிகள் இருக்கிறதா?
இப்போதைக்கு விஜய் எந்த specific election manifesto-வையும் வெளியிடவில்லை. ஆனாலும் அவர் பேச்சில் வரும் முக்கிய புள்ளிகள்:
- நல்ல ஆட்சி (Good Governance)
- Corruption-free administration
- கல்வி, வேலை வாய்ப்புகள் மீது முக்கியம்
இது பொதுவான promises. ஆனால் மக்கள் கேள்வி – “Detailed plan எப்போது வரும்?” என்பதே.
DMK & AIADMK மீது தாக்கம்
விஜய்-யின் district-level tour DMK, AIADMK இரண்டுக்கும் headache ஆகி இருக்கிறது.
- DMK-வின் traditional youth base-ல் சிலர் விஜயை support பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்.
- BJP – AIADMK-வின் anti-DMK vote bank-க்கும் alternative-ஆக விஜய் தோன்றுகிறார்.
- சிறிய parties, caste-based outfits கூட impact-ஆகும் வாய்ப்பு இருக்கு.
இது இரு பெரிய கட்சிகளுக்கும் vote split-ஐ ஏற்படுத்தும் என்று analysts கூறுகிறார்கள்.
விஜய் – சீமான் மோதல்
தமிழக அரசியலில் தற்போது பேசப்படும் ஹாட் டாபிக் – விஜய் – சீமான் மோதல். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, சீமான் தொடர்ந்து அவரை குறிவைத்து விமர்சனங்கள் செய்து வருகிறார். “விஜய்க்கு அரசியல் அனுபவமே இல்லை”, “அவர் DMK-க்கு பக்கபலமாக செயல்படுகிறார்” போன்ற குற்றச்சாட்டுகளை சீமான் தனது பேச்சுகளில் எப்போதும் முன்வைத்து வருகிறார். சில நேரங்களில் வாடா, போடா என்று வெளிப்படையாகவும் தாக்குவதால், இந்த clash அரசியல் வட்டாரத்தில் அதிக கவனத்தை ஈர்க்கிறது.

ஆனால், விஜய் எந்த நேரத்திலும் சீமான் பேச்சுகளுக்கு நேரடி பதில் அளிக்கவில்லை. Silent strategy பின்பற்றுவது தான் விஜயின் approach. இதனால், ரசிகர்கள் பார்வையில் அவர் dignity-யை காப்பாற்றுகிறார் என்று சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம், சீமான் திட்டமிட்டே விஜயை குறிவைத்து பேசுகிறார், இதன் மூலம் தனது visibility-ஐ கூட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார் எனவும் விமர்சனம் கிளம்பியுள்ளது. எந்த வழியிலானாலும், இந்த மோதல் 2026 தேர்தலைச் சுற்றி பெரிய அரசியல் விவாதமாக மாறி விட்டது.
TVK உடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ள கட்சிகள்
விஜய் அரசியலில் புதிதாக களமிறங்கியிருப்பதால், 2026 தேர்தலில் அவர் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்பது பெரிய கேள்வி. DMK, AIADMK போன்ற முக்கிய கட்சிகளுடன் open கூட்டணி அமைப்பது சாத்தியம் குறைவு, ஏனெனில் அவர் தன்னை ஒரு மாற்று சக்தியாக project செய்து வருகிறார். ஆனால், Congress போன்ற தேசியக் கட்சிகளுடன் soft understanding இருக்க வாய்ப்பு அதிகம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், PMK, VCK, MDMK, Left parties போன்ற நடுத்தர, சிறிய பிராந்தியக் கட்சிகள் விஜயின் கூட்டணியில் சேர அதிக chance உள்ளது. இவர்களுக்கு தனியாக பெரிய தாக்கம் இல்லாததால், விஜயின் fan base மற்றும் புதிய சக்தியுடன் சேர்ந்து ஒரு third alternative உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி நடந்தால், DMK-AIADMK vote share-ஐ split செய்யும் அளவுக்கு விஜய் கூட்டணி முக்கியத்துவம் பெறக்கூடும்.
2026 தேர்தலில் என்ன ஆகும்?
இப்போதைய நிலவரப்படி, விஜய் 2026 தேர்தலில் contest பண்ணுவார் என்பது உறுதி. ஆனால் பெரிய கேள்வி – எவ்வளவு seats வெல்ல முடியும்?
Scenarios:
- Big Win – மக்கள் Vijay-ஐ alternative-ஆக் கொண்டு CM race-க்கு push பண்ணுவார்கள்.
- Moderate Entry – 15–20 seats-ஐ பிடித்து, 3rd force-ஆக assembly-ல் இருப்பார்.
- Low Impact – Star power இருந்தாலும் votes-ஆக மாறாவிட்டால், limited presence-ஆக முடியும்.
தோல்வி அடைந்தால் சினிமாவுக்கு திரும்புவாரா?
இது fans அதிகம் கேட்கும் கேள்வி. 2026 தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால், விஜய் மீண்டும் சினிமாவுக்கு திரும்புவாரா?
- சில industry insiders – “விஜய் one way ticket தான் எடுத்துட்டார். சினிமாவுக்கு திரும்ப மாட்டார்” என்று சொல்கிறார்கள்.
- ஆனால் மற்றொரு பகுதி – “Failure வந்தால் அவர் 1–2 films பண்ணி image build செய்து மீண்டும் contest பண்ணுவார்” என்று கூறுகிறது.
அவரது decision fully political results-ஐப் பொறுத்தது.
விஜய் அரசியலுக்கு வருவது Tamil Nadu politics-க்கு game changer ஆகலாம். அவர் stardom, fans support இரண்டும் பெரிய strength. ஆனால், ground-level politics, booth strategy, promises-ஐ vote-ஆக மாற்றுவது தான் மிகப்பெரிய சவால்.
DMK–AIADMK மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் undeniable. ஆனால், 2026 தேர்தலில் அவர் பெறும் actual result தான் அவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கும். சினிமாவுக்கு திரும்புவாரா அல்லது அரசியலில் நிலைத்துவிடுவாரா என்பதை காலமே சொல்லும்.