கடந்த சில மாதங்களாக கருப்பன் மற்றும் ஜெயிலர் 2 படங்கள் ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் வைத்துள்ளன. இந்த இரண்டு பெரிய படம் ரீலீஸ் கால கட்ட–Box Office நிலைகளில் என்ன தாக்கம் ஏற்படலாம் என்பதை பார்க்கலாம்.
தோல்விக்கு பின் சூரியா எடுத்த முடிவு
அதாவது சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா மற்றும் ரெட்ரோ படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் சற்று தோல்வி அடைந்தது. இதனால் அடுத்த படம் வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணிய சூர்யா, மாஸ் ஆன ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். அந்த வகையில் சூர்யா 45 ஆவது படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்குகிறார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இப்படத்திற்கு கருப்பன் என்று பெயர் வைத்து சூர்யாவின் பிறந்தநாள் அன்று டீசரை வெளியிட்டார்கள். இதில் இரண்டு கேரக்டர்களை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பக்கம் சூர்யாவின் கிராமப்புற அவதாரமும் இன்னொரு பக்கம் நீதிமன்ற அவதாரமும் பார்க்க முடிந்தது. மேலும் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது.
அத்துடன் இதில் சூர்யாவுடன், த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் இணைந்திருக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். பொதுவாக ஆர்.ஜே பாலாஜி இயக்கக்கூடிய படங்கள் சற்று வித்தியாசமாகவும் ரசிகர்களை பார்க்க வைக்கும் விதமாகவும் படம் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் சூரியா ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் வரப்போகும் கருப்பன் படமும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

ரிலீஸ் தேதியில் இருந்து பின்வாங்கும் கருப்பன் படம்
இப்படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் பண்ண வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியானது. ஆனால் அதற்குள் இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டது. அதாவது ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்காக ரஜினி கேரளா போயிட்டு வரும்போது பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது ஜெயிலர் 2 அடுத்த வருஷம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்று ஒரு அறிவிப்பை கொடுத்திருந்தார்.
இதனால் இப்படத்துடன் போட்டி போடும் விதமாக நிச்சயம் கருப்பன் படம் வெளிவர வாய்ப்பு இல்லை. அதனால் ரிலீஸ் தேதியில் இருந்து இப்படம் தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது. அதனால் அடுத்த வருஷம் தீபாவளிக்கு கருப்பன் படத்தை எதிர்பார்க்கலாம். இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றியில் மோதக்கூடியவை. அதனால் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்தால் பிரச்சினைகள் வரலாம் என்று கருப்பன் படம் ஒதுங்கி விட்டது.