
தமிழ் சினிமாவின் புதிய முகம், திரைப்பட உலகின் எல்லைகளை உடைத்து பான்-இந்தியா கவனம் பெற்றவர்-லோகேஷ் கனகராஜ். ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ எல்லாம் அவரை ஒரு தனி பிராண்டாக மாற்றிவிட்டன. இப்போது அந்த லோகேஷ், முதல்முறையாக தெலுங்கு சினிமாவில் கால் பதிக்கிறார். இது சாதாரண ஒரு டெப்யூ அல்ல… இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை உருவாக்கும் மாபெரும் கூட்டணி.
nn
இந்த புதிய படத்தை ஜனநாயகன் படத்தை தயாரிக்கும் KVN Productions தயாரிக்கிறது. தற்போது இந்தியா முழுவதும் பெரும் முதலீடுகளைச் செய்யும் நிறுவனம். கேரக்டர்களும், உலகக்கட்டுமானமும், லோகேஷ் விரும்பும் அளவில் பிரம்மாண்டமாக இருக்கும் என படக்குழு உறுதியாக தெரிவித்துள்ளது.
nn
தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் பான்-இந்தியா ஹீரோ பிரபாஸ் இணையும் காம்பினேஷன். இந்த இருவரும் ஒரே படத்தில் வருவது அரிது; அந்த ஸ்கிரிப்ட் லோகேஷ் மட்டுமே உடைத்து உருவாக்கியிருக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு மெகா ஹைப்.
nn
சுவாரஸ்யமான தகவல் என்ன தெரியுமா? இந்த ஸ்கிரிப்ட் முதலில் லோகேஷ் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருக்கும் கூறியதாக சொல்லப்படுகிறது. சில காரணங்களால் இந்த கூட்டணி முன்னேறவில்லை; ஆனால் அந்த same ஸ்கிரிப்ட், புதிய அளவுக்கு மாற்றப்பட்டு,தெலுங்கில் பெரியளவில் உருவாகிறது என்பது களத்தில் பேசப்படும் பெரிய செய்தி.
nn
இந்த படத்திற்கான வேலைகள் சூப்பர் ஸ்பீட்டில் நடந்து வருகிறது. பவன் கல்யாண் அவருடைய அரசியல் மற்றும் படப்பிடிப்பு commitments காரணமாக லோகேஷ் திட்டத்தை துல்லியமான வேலைப்பாடுகளுடன் திட்டமிடுகிறார். மறுபுறம் பிரபாஸ் உலகளாவிய உச்சத்தில் இருக்கும் நேரம் என்பதால் இந்த காம்போ பான் இந்தியா box office-ல் வெடிக்கும் என்பது உறுதி.
nn
லோகேஷ் கனகராஜ் தெலுங்கு சினிமாவின் ஸ்டைலையும், தன் LCU ஸ்டைலின் தீவிரத்தையும் கலந்த ஒரு புதிய ‘அட்டகாசமான’ உலகத்தை உருவாக்கப் போகிறார் என்று தகவல். தற்போது ‘ஜனநாயகன்’ இந்தியா முழுவதும் மிக மிக அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகி விட்டது.