நெட்பிளிக்ஸில் பார்க்க வேண்டிய 12 த்ரில்லர் படங்கள்! 2026 ஜனவரி ஸ்பெஷல்

திகில் திரைப்படங்களில் ‘ஸ்லாஷர்’ (Slasher) வகை என்பது எப்போதுமே ரசிகர்களுக்கு ஒரு தனி அட்ரினலின் ரஷ் கொடுக்கும் விஷயம். ஒரு மர்மமான கொலையாளி, கத்தி அல்லது கோடாரி போன்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அடுத்தடுத்து கொ…லைகளைச் செய்வதும், அதிலிருந்து நாயகன் அல்லது நாயகி தப்பிப்பதும் தான் இந்த வகைப் படங்களின் அடிப்படை. நெட்பிளிக்ஸ் தளம் இத்தகைய படங்களுக்குப் புகலிடமாக விளங்கி வருகிறது. இதோ அந்தப் பட்டியலில் உள்ள 12 சிறந்த படங்கள்:

nn

12. தி கான்பரன்ஸ் (The Conference – 2023)

nn

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இந்தப் படம், நவீன கால ஸ்லாஷர் வகைமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நகராட்சி ஊழியர்கள் ஒரு குழுவாக இணைந்து ஒரு மாநாட்டிற்காக (Conference) காடுகளுக்கு அருகில் உள்ள தங்குமிடத்திற்குச் செல்கிறார்கள். ஒரு புதிய ஷாப்பிங் மால் கட்டுவது தொடர்பான விவாதங்கள் நடக்கும்போது, அங்கிருக்கும் அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈகோ மோதல்களைப் படம் மெல்லிய நகைச்சுவையுடன் காட்டுகிறது.ஆனால், ஒரு முகமூடி அணிந்த கொ…லையாளி நுழையும்போது நிலைமை தலைகீழாக மாறுகிறது. இதில் வரும் காட்சிகள் மிகவும் ஆக்ரோஷமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். கார்ப்பரேட் அரசியலை ஸ்லாஷர் திகிலுடன் இணைத்த விதத்திற்காக இந்தப் படம் பெரிதும் பாராட்டப்பட்டது.

nn

11. கேர்ள்ஸ் வித் பால்ஸ் (Girls with Balls – 2018)

nn

இது ஒரு பிரெஞ்சு மொழி திகில் நகைச்சுவைத் திரைப்படம். ‘பால்கான்ஸ்’ (Falcons) என்ற பெண்கள் வாலிபால் அணி, ஒரு போட்டியில் தோற்றுவிட்டுத் திரும்பும்போது காட்டில் வழிதவறிச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் ஒரு ரௌடி கும்பலால் வேட்டையாடப்படுகிறார்கள். பொதுவாக ஸ்லாஷர் படங்களில் பெண்கள் பலவீனமானவர்களாகக் காட்டப்படுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் அந்த வாலிபால் வீராங்கனைகள் தங்களின் விளையாட்டில் பயன்படுத்தும் திறமைகளை வைத்தே குற்றவாளிகளை  எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கும். இது ஒரு ‘சர்வைவல் ஸ்லாஷர்’ (Survival Slasher) வகையாகும்.

nn

10. டெக்சாஸ் செயின்சா மேசகர் (Texas Chainsaw Massacre – 2022)

nn

1974-ல் வெளியான உலகப்புகழ் பெற்ற கிளாசிக் திகில் படத்தின் நேரடித் தொடர்ச்சியாக இது உருவானது. பல தசாப்தங்களுக்குப் பிறகு, மீண்டும் ‘லெதர்ஃபேஸ்’ (Leatherface) என்ற கொடூரக் கொ…லையாளி தனது செயின்சாவுடன் (Chainsaw) வேட்டைக்குத் திரும்புகிறான். இளம் தொழில்முனைவோர் ஒரு பாழடைந்த நகரத்தை விலைக்கு வாங்கி அதை மாற்ற முயலும்போது, அங்கு மறைந்திருக்கும் பழைய குற்றவாளிகளை  சீண்டுகிறார்கள். இதில் வரும் ‘பஸ் திகில் காட்சி’ (Bus Massacre) இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. பழைய நினைவுகளையும் நவீன காலத் தொழில்நுட்பத்தையும் இணைத்த விதத்தில் இது ஒரு திகிலான  அனுபவத்தைத் தரும்.

nn

9. கில்லர் புக் கிளப் (Killer Book Club – 2023)

nn

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இந்தப் படம், திகில் நாவல்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்ட எட்டு கல்லூரி மாணவர்களைப் பற்றியது. அவர்கள் செய்யும் ஒரு விபரீத விளையாட்டு ஒரு பேராசிரியரின் மரணத்திற்கு வழிவகுக்கிறது. அந்த ரகசியத்தை மறைக்க முயலும்போது, ஒரு கோமாளி (Clown) முகமூடி அணிந்த நபர் அவர்களைத் துரத்தித் துரத்திக் வதம் செய்கிறான். நாவல்களில் வருவது போலவே ஒவ்வொரு கொ…லையும் திட்டமிடப்படுவது இந்தப் படத்தின் பலம். ‘யார் அந்தக் கொ…லையாளி?’ என்ற மர்மம் இறுதிவரை நீடிப்பது ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும்.

nn

8. ஃபியர் ஸ்ட்ரீட் பகுதி 2: 1978 (Fear Street Part Two: 1978 – 2021)

nn

நெட்பிளிக்ஸின் புகழ்பெற்ற ‘ஃபியர் ஸ்ட்ரீட்’ முத்தொகுப்பின் (Trilogy) இரண்டாவது பாகம் இது. 1978-ம் ஆண்டு ஒரு சம்மர் கேம்பில் (Summer Camp) நடக்கும் கொலைகளை இது விவரிக்கிறது. ஆர்.எல். ஸ்டைனின் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது. 70-களின் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம், ‘ஃபிரைடே தி 13த்’ (Friday the 13th) போன்ற கிளாசிக் படங்களை நினைவுபடுத்தும். சகோதரிகளுக்கு இடையிலான பாசம் மற்றும் ஒரு கொடூரமான சாபம் ஒரு ஊரையே எப்படிப் பலிவாங்குகிறது என்பதை மிக கொடூரமாக இந்த படம் காட்டியிருக்கும்.

nn

7. நோபடி ஸ்லீப்ஸ் இன் தி வுட்ஸ் டுநைட் 2 (Nobody Sleeps in the Woods Tonight 2 – 2021)

nn

போலந்து நாட்டின் முதல் ஸ்லாஷர் படத்தின் தொடர்ச்சி இது. முதல் பாகத்தில் தப்பித்த நாயகி, இரண்டாம் பாகத்தில் ஒரு விசித்திரமான வைரஸ் தொற்றால் உருமாற்றம் அடைவதையும், அதன்பின் நடக்கும் வன்முறைகளையும் இது பேசுகிறது. இந்தப் படம் ஸ்லாஷர் வகையைத் தாண்டி, ‘மான்ஸ்டர் ஹாரர்’ (Monster Horror) பாணிக்கு மாறுகிறது. வழக்கமான கதையிலிருந்து விலகிச் சென்று, கொ…லையாளிகளின் த்துவம்: பார்வையிலிருந்து கதையைச் சொல்லும் புதுமையான முயற்சி இந்தப் படத்தில் உள்ளது.

nn

6. தேர்ஸ் சம்ஒன் இன்சைட் யுவர் ஹவுஸ் (There’s Someone Inside Your House – 2021)

nn

நெப்ராஸ்காவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் ரகசியங்களை அம்பலப்படுத்தி, அவர்களைக் கொ…லை செய்யும் ஒரு மர்ம நபர் பற்றிய கதை இது. கொ…லையாளி, தான் யாரைக் கொல்லப் போகிறானோ, அவர்களின் முகத்தையே முகமூடியாக அணிந்து வருவதுதான் இந்தப் படத்தின் மிரட்டலான அம்சம். இன்றைய இளைய தலைமுறையினரின் தனிப்பட்ட ரகசியங்கள் மற்றும் சமூக ஊடகத் தாக்கம் போன்றவற்றை திகிலுடன் கலந்து கொடுத்திருப்பார்கள்.

nn

5. தி பேபிசிட்டர்: கில்லர் குயின் (The Babysitter: Killer Queen – 2020)

nn

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான இந்தப் படம், முழு நீள ஆக்ஷன், காமெடி மற்றும் ஸ்லாஷர் கலவையாகும். சாத்தானியச் சடங்குகளில் ஈடுபடும் ஒரு குழுவிடமிருந்து தப்பிக்கும் சிறுவனின் போராட்டமே கதை.  இதில் வரும் வன்முறை மிகவும் ‘ஸ்டைலிஷ்’ ஆக இருக்கும். வண்ணமயமான திரைக்கதை, அதிரடி நகைச்சுவை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இந்தப் படத்தை ஒரு ‘பாப்கார்ன் என்டர்டெய்னர்’ ஆக மாற்றுகின்றன.

nn

4. ஃபியர் ஸ்ட்ரீட் பகுதி 1: 1994 (Fear Street Part One: 1994 – 2021)

nn

முத்தொகுப்பின் முதல் பாகமான இது, 90-களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது. ஷேடிசைடு (Shadyside) என்ற ஊரில் தொடர்ச்சியாக நடக்கும் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் சூனியக்காரியின் சாபத்தை முறியடிக்க முயலும் டீனேஜ் நண்பர்களைப் பற்றிய படம்.  ‘ஸ்க்ரீம்’ (Scream) பட வரிசையைப் போன்ற ஒரு உணர்வைத் தரும் இந்தப் படம், மிகச் சிறந்த இசையமைப்பு மற்றும் விறுவிறுப்பான காட்சிகளைக் கொண்டது. குறிப்பாக பிரட் ஸ்லைசர் (Bread Slicer) பயன்படுத்தப்படும் ஒரு கொ…லைக் காட்சி மிகவும் பயங்கரமானது.

nn

3. ஃபியர் ஸ்ட்ரீட் பகுதி 3: 1666 (Fear Street Part Three: 1666 – 2021)

nn

முந்தைய இரண்டு பாகங்களிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை தரும் இறுதிப் பாகம் இது. 1660-களில் எப்படி ஒரு சாபம் உருவானது என்பதை வரலாற்றுப் பின்னணியில் விளக்கி, மீண்டும் 1994-ல் கதையை முடிப்பார்கள். ஒரே கதையை மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் சொன்ன நேர்த்தி இந்தப் படத்தை உலக அளவில் கவனிக்க வைத்தது. இதில் உள்ள எமோஷனல் காட்சிகள் மற்றும் திகில் காட்சிகள் சம அளவில் நேர்த்தியாக இருக்கும்.

nn

2. நோபடி ஸ்லீப்ஸ் இன் தி வுட்ஸ் டுநைட் (Nobody Sleeps in the Woods Tonight – 2020)

nn

தொழில்நுட்பத்திற்கு அடிமையான (Technology Addicts) சில இளைஞர்கள் ஒரு காட்டிற்கு முகாம் செல்கிறார்கள். அங்கு இணையம், மொபைல் எதுவுமே கிடையாது. அங்கு வசிக்கும் ஒரு உருமாறிய மனிதனிடம் அவர்கள் எப்படிச் சிக்கிச் சாகிறார்கள் என்பதே முதல் பாகத்தின் கதை.வழக்கமான ஸ்லாஷர் டெம்ப்ளேட்டை அப்படியே பின்பற்றி இருந்தாலும், போலந்து நாட்டுச் சூழலில் அது புதுமையாகத் தெரிந்தது. வன்முறைக் காட்சிகள் மிகக் கொடூரமாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

nn

1. ஐ நோ வாட் யூ டிட் லாஸ்ட் சம்மர் (I Know What You Did Last Summer – 1997)

nn

ஸ்லாஷர் படங்களில் இது ஒரு எக்காலத்திற்கும் பொருந்தும் ‘கல்ட் கிளாசிக்’ (Cult Classic). நான்கு நண்பர்கள் ஒரு விபத்து ஏற்படுத்திவிட்டு அந்த உண்மையை மறைக்கிறார்கள். சரியாக ஓராண்டு கழித்து, “கடந்த கோடையில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எனக்குத் தெரியும்” என ஒரு மர்ம நபரிடமிருந்து கடிதம் வருகிறது. கையில் ஒரு கொக்கி (Hook) ஏந்திய அந்த மீன்பிடி தொழிலாளி உருவம் பலரது கனவிலும் பயத்தை வரவழைத்தது. ஸ்லாஷர் வகையை உலகளவில் பிரபலப்படுத்தியதில் இந்தப் படத்திற்குப் பெரும் பங்கு உண்டு. நெட்பிளிக்ஸில் தற்போதும் அதிகம் பார்க்கப்படும் கிளாசிக் படங்களில் இதுவும் ஒன்று.

nn

ஸ்லாஷர் படங்கள் என்பவை வெறும் கொடூரமான படங்கள் மட்டுமல்ல, அவை மனிதனின் உயிர்வாழும் உள்ளுணர்வையும் (Survival Instinct), மர்மங்களை விடுவிக்கும் ஆர்வத்தையும் தூண்டுபவை. மேலே குறிப்பிட்டுள்ள 12 படங்களும் வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியிலும், வெவ்வேறு காலக்கட்டங்களிலும் அமைக்கப்பட்டவை. நீங்கள் ஒரு தீவிர திகில் ரசிகர் என்றால், இந்த வார இறுதியில் நெட்பிளிக்ஸில் இந்தப் பட்டியலை முடிக்கத் தயாராகுங்கள்!

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →