அருவா பிடிக்க ஆசைப்படும் சாக்லேட் ஹீரோ.. மதில் மேல் பூனையாய் ஹரியின் நிலைமை!

Hari: தொடர் தோல்விகள் கொடுத்து வரும் இயக்குனரை நம்பி ஆட்டநாயகன் ஒருவர் அகல கால் வைத்திருப்பது தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரிய பேச்சாக போய்க்கொண்டிருக்கிறது.

மதில் மேல் பூனையாய் நிலைமை!

வெற்றி என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் கிடைக்கும் என்பதெல்லாம் சினிமாவில் நடக்காத விஷயம். அதிலும் மார்க்கெட் போன ஹீரோ ஒருவர் திடீரென பழைய நிலைமையை பிடிப்பது என்பதெல்லாம் கோடியில் ஒருத்தருக்கு தான் அமையும்.

இது தெரியாமல் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் ஹீரோவாக வலம் வந்த பிரஷாந்த் தடாலடியாக ஆக்சன் ஹீரோவாக மாற இருக்கிறார்.

சாமி, சிங்கம் போன்ற அடிதடி படங்களை கொடுத்த இயக்குனர் ஹரியுடன் கூட்டணி களத்தில் இறங்கி இருக்கிறார். ஹரிக்கு கடந்த சில வருடங்களாகவே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் வெற்றி பெறவில்லை.

பிரசாந்தை நம்பி ஹரி, ஹரியை நம்பி பிரஷாந்த் மதில் மேல் பூனையாய் தற்போது இருவரும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்