வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நடிகைகளையே தாக்கும் விசித்திர நோய்.. சமந்தாவுக்கு வந்ததைப் போல் விஜய் பட ஹீரோயினுக்கு வந்த பேராபத்து

Actress Samantha: சமீப காலமாகவே சினிமா நடிகைகளில் சிலர் தங்களுக்கு வித்தியாசமான நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக ரசிகர்களிடம் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும், பிரபலங்களும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, சீக்கிரமே அந்த நோயிலிருந்து மீண்டு வர வேண்டும் எனவும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் பயங்கரமாக வைரல் ஆகியது நடிகை சமந்தா தான்.

சமந்தா விவாகரத்திற்கு பிறகு புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது. ஆனால் அதிலிருந்து சில மாதங்களிலேயே தான் மையோசைட்டிஸ் என்னும் தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமந்தா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு தான் இப்படி ஒரு நோய் இருக்கும் என்றே பலருக்கும் தெரியவந்தது.

Also Read:பலான காட்சிகளால் கொட்டிய பண மழை.. வியக்க வைத்த சன்னி லியோனின் சொத்து மதிப்பு

இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதே நேரத்தில் அவருக்கு யசோதா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. தற்போது சமந்தா அந்த நோயிலிருந்து மீண்டு விட்டார் என்று சொன்னாலும் முழுவதுமாக சரியாகவில்லை என்பது போல் தெரிகிறது. அவரும் தன்னுடைய ஆன்மீக பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது மற்றும் ஒரு நடிகை அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை நந்திதா. இந்த படத்திற்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இவர் நிறைய லோ பட்ஜெட் படங்களில் ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார்.

Also Read:நீலாம்பரியை பதம்பார்த்த குடும்ப இயக்குனர்.. மனைவிக்கு தெரிந்த கர்ப்பமான மேட்டர், அவசர திருமணம்

தளபதி விஜய் நடித்த புலி திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். சமீப காலமாக தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த இவருக்குத்தான் ஃபைப்ரோமியால்ஜியா என்னும் விசித்திரமான நோய் ஏற்பட்டு இருக்கிறதாம்.இந்த நோய் வந்தால் ஞாபக மறதி, குழப்பத்தன்மை,தசைக் கோளாறு,எந்த வேலை செய்தாலும் உடனே சோர்வு, உடல் எடை அதிகம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தற்போது இவருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இது போன்ற விசித்திரமான நோய் நடிகைகளையே தொடர்ந்து தாக்கி வருகிறது. டயட், உடல் எடை மற்றும் அழகில் அதிக கவனம் செலுத்துவதால் இவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Also Read:16 வயதில் திருமணம், ரெண்டு கல்யாண வாழ்க்கையும் சோலி முடிந்த பரிதாபம்.. சரண்யாவுக்கு டஃப் கொடுக்கும் நடிகை

Trending News