
Ajith Kumar: அஜித் நடித்த குட் பேட் அக்லி படமும் தனுஷின் இட்லி கடை படமும் ஒரே நாளில் மோத வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் பெரிய விருப்பம்.
ஆனால் ஒரு சில காட்சிகள் இன்னும் படம் எடுத்து முடிக்கப்படாததால் இட்லி கடை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
ஒரு பக்கம் அஜித் ஆதரவாளர்கள் இணையதளத்தில் அஜித்தை பார்த்து தனுஷ் பின் வாங்குகிறார் அதனால் தான் படத்தை ரிலீஸ் செய்யவில்லை என்று புரளியை கிளப்ப ஆரம்பித்து விட்டார்கள்.
அஜித்தை பார்த்து பின்வாங்கினாரா தனுஷ்?
உண்மை காரணம் இதன் பின்னால் பெரிய அளவில் பிசினஸ் ஒன்று நடந்து கொண்டிருப்பது தான். கடந்த மாதத்தில் அஜித் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை தனுஷ் இயக்கப் போகிறார் என பேசப்பட்டது.
டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் தனுஷ் சமீபத்தில் அஜித்திடம் கதை பற்றி போனில் பேசியிருக்கிறார்.
மேலும் அப்போதுதான் இட்லி கடை ரிலீஸ் தேதியை மாற்றி வைப்பது பற்றியும் பேச்சு வார்த்தை நடந்திருப்பதாக தெரிகிறது.
மிகப் பெரிய அளவில் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் போய்க் கொண்டிருப்பது தெரியாமல் தனுஷ் மற்றும் அஜித்தின் ஆதரவாளர்கள் தான் இணையதளத்தில் இப்போது முட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.