அஜித்தின் GBU வசூலை மிஞ்சிய குபேரா.. ஆஹா! இப்படி ஒரு பஞ்சாயத்த கிளப்பி இருக்காங்களே!

Ajith Kumar: உச்சந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் சமூக வலைத்தளத்தில் தற்போது அஜித் vs தனுஷ் என்ற மோதல் ஆரம்பித்திருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் வசூலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ரிலீசான தனுஷின் குபேரா முந்திவிட்டது என்பதுதான் அந்த விஷயம்.

புக் மை ஷோ என்னும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வெப்சைட்டுகளில் தரவு வைத்து இந்த பஞ்சாயத்து கிளம்பி இருக்கிறது. அதாவது கடைசி மூன்று மாதம் ரிலீஸ் ஆன படங்களில் இரண்டு நாட்களில் அதிக அளவு டிக்கெட் புக் பண்ணிய மூன்று படங்களின் லிஸ்ட்டை கொண்டு வந்திருக்கிறார்கள்.

GBU வசூலை மிஞ்சிய குபேரா

அதில் மூன்றாவது இடத்தில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் இருக்கிறது.

முதலிடத்தை தனுஷின் குபேரா படம் பெற்றிருக்கிறது. இந்த தரவு X தளத்தில் பதிவானதும் ஒரு பக்கம் அஜித்தை தனுஷ் வீழ்த்தி விட்டார் என அவருடைய ஆதரவாளர்கள் கிளம்பி விட்டார்கள்.

இன்னொரு பக்கம் அஜித்தின் ஆதரவாளர்கள் நியாயமான கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது அஜித் என்ற ஒரு மாஸ் ஹீரோவை நம்பி இந்த படம் ரிலீஸ் ஆனது. அதுவும் படம் ரிலீஸ் ஆன இரண்டாவது நாள் வெள்ளிக்கிழமை.

ஆனால் தனுஷ் படம் ரிலீஸ் ஆன இரண்டாவது நாள், சனிக்கிழமை வார இறுதி நாளில் படம் பார்க்க நிறைய கூட்டம் வரும். மற்றும் ஒன்று இந்த படத்தில் தனுஷ் மட்டும் இல்லாமல் இன்னொரு மாஸ் ஹீரோ நாகார்ஜுனா இருக்கிறார்.

மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயத்தை வைத்திருக்கிறார்கள். இது எல்லாம் சரி என்றாலும் இந்த போட்டி எப்பொழுது ஆரம்பித்தது என சில பேருக்கு சந்தேகம் இருக்கலாம்.

அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி வெளியானதும் தனுஷ் தன்னுடைய இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார்.

ஒரு பக்கம் தனுஷ் அஜித்தை பார்த்து பயந்துவிட்டார் என கிளப்பி விடப்பட்டது. இன்னொரு பக்கம் தனுஷின் ஆதரவாளர்கள் பொங்கி விட்டார்கள். அப்போ ஆரம்பிச்ச பஞ்சாயத்தை இப்போ மறுபடியும் கிளப்பி இருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →