புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிக்பாஸ் பைனல் மேடையில் நடந்த மிகப்பெரிய தகராறு.. அர்ச்சனா இன்னும் வெளியில் வராததற்கு இதுதான் காரணமா?

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம் கடந்து விட்டது. இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்ச்சியின் அக்கப்போர் இன்னும் முடிந்த பாடில்லை. ஒரு பக்கம் அர்ச்சனா வெற்றியை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், மறுபக்கம் மாயா தான் உண்மையான வெற்றியாளர் என சில கூட்டங்கள் அறைகூவல் போட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தின் தலைவியே வனிதாவாக தான் இருக்குமோ என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருக்கிறது.

அவர் கலந்து கொண்ட மூன்றாவது சீசனில் இப்படி குமுறி இருந்தால் கூட ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் அவருடைய மகள் கலந்து கொண்ட இந்த ஏழாவது சீசனில் அர்ச்சனாவின் வெற்றியை தாங்க முடியாமல் சேனலுக்கு சேனல் உட்கார்ந்து கொண்டு வனிதா கதறுவது பார்ப்பதற்கே மகா மட்டமாக இருக்கிறது. தொடர்ந்து அர்ச்சனா ஜெயித்தது போட் ஓட்டுகளை வைத்து தான் என தேவையில்லாத கருத்தை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 7 இறுதிப் போட்டி நடந்து முடிந்த அன்று வனிதா நேரலையில் ஒரு விஷயத்தை பகிர்ந்து இருந்தார். தற்போது அது மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த சீசன் 7 நிகழ்ச்சியை பொறுத்த வரைக்கும் மாயா, மணி, அர்ச்சனா மூவரும் இறுதிப்போட்டியில் இருந்தார்கள். இதில் மாய மூன்றாவது இடம், மணி இரண்டாவது இடம், அர்ச்சனா முதலிடத்தை பெற்றார்கள். 50 லட்சம் பணத்தோடு, வீடு எல்லாம் சேர்த்து அர்ச்சனாவுக்கு மொத்தம் 95 லட்சம் கிடைத்திருக்கிறது.

Also Read:ஆண்டவருக்கு கொடுத்த பதவி.. கண்டுக்காமல் தூக்கிபோட்ட உலக நாயகன்

பிக்பாஸ் பைனல் மேடையில் நடந்த மிகப்பெரிய தகராறு

அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என அறிவித்தபோது அந்த நிகழ்ச்சி அரங்கில் மிகப்பெரிய அளவில் ரகளை ஏற்பட்டதாக வனிதா சொல்லி இருக்கிறார். அர்ச்சனா வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது நியாயமே இல்லை, அவர் காசு கொடுத்து ஓட்டுகளை வாங்கி இருக்கிறார் என அந்த இடத்திலேயே மாயாவின் ரசிகர்கள் கத்தி, கூச்சலிட்டு சண்டை போட்டதாக வனிதா சொல்லி இருக்கிறார். வனிதா விஜயகுமார் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

வனிதா வாயாலயே வடை சுடுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஜோவிகா எலிமினேஷன் ஆகப்போவதை பற்றி அவரிடம் ஒருமுறை கேள்வி கேட்கப்பட்ட போது அப்படியெல்லாம் எதுவுமே இல்லை, அப்படி இருந்திருந்தால் எனக்கு போன் கால் வந்திருக்கும் என்று கதை விட்டவர்தான். இதனால் தான் வனிதா சொல்லும் இந்த விஷயத்தை நம்பலாமா வேண்டாமா என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருக்கிறது.

இருந்தாலும் மாயாவின் அபிமானிகள் பலரும் இதுவரையிலும் அர்ச்சனா போட் ஓட்டுகளை வைத்து தான் வெற்றி பெற்றதாக மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சிலரும் மாயா தான் உண்மையான வெற்றியாளர் என்று கொடுத்த காசுக்கு மேல் கூவி வருகிறார்கள். இதனால் தான் அர்ச்சனா இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி வாயை திறக்காமல் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. இருந்தாலும் விரைவில் இந்த குற்றச்சாட்டுக்கு அவர் பதிலடி கொடுப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Also Read:முன்னாள் காதலிக்கு போன் போட்ட பிக்பாஸ் 7 ரன்னர் மணி.. ரூட்ட கொஞ்சம் மாத்துங்க தலைவா

Trending News