Arivu – Santhosh Narayanan: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முணுமுணுக்க வைத்த பாட்டு தான் ‘எஞ்சாயி எஞ்சாமி’. இந்தப் பாட்டு இசையால் ஜெயித்ததா பாடல் வரிகளால் ஜெயித்ததா இல்லை அதற்கு குரல் கொடுத்த பாடகியால் ஜெயித்ததா என கேட்டால் யாராலும் பதில் சொல்லி விட முடியாது.
சந்தோஷ் நாராயணன், தீ , அறிவு மூவரும் சேர்ந்தது தான் இந்தப் பாடல். ஆனால் இந்த பாட்டு இவர்களுடைய நட்புக்கு முடிவாகவும் மாறிவிட்டது. ஒரு பெரிய பத்திரிக்கையில் இந்த பாட்டை பற்றி எழுதும்போது சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகி தீயை பற்றி அட்டைப் புத்தகத்தில் போட்டு எழுதி விட்டார்கள்.
அறிவைப் பற்றி அதில் எதுவுமே குறிப்பிடவில்லை என்பது பெரிய அளவில் சர்ச்சையாக மாறியது. அதன் பின்னர் அறிவு புகைப்படத்தை மட்டுமே வைத்து அந்த பத்திரிக்கை புத்தகத்தை வெளியிட்டு இருந்தது. அதை தொடர்ந்து செஸ் உலகப் போட்டி சென்னையில் நடைபெற்ற போது பாடகி தீ மட்டும் இந்த பாடலை மேடை ஏறி பாடியிருந்தார்.
‘எஞ்சாயி எஞ்சாமி’ பாட்டால் வந்த பஞ்சாயத்து
இந்த முறை வாயை திறந்து என்ன பிரச்சனை என்பதை அறிவு பேச ஆரம்பித்தார். பாட்டு ஹிட் ஆனாலும் தான் புறக்கணிக்கப்பட்டதாக பேசி இருந்தார். அதை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் ஒரு கச்சேரி வைத்திருந்தார்.
அந்த கச்சேரிக்கு அறிவு வருவாரா என பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டார்கள். அதற்கு அறிவுக்கு நான் பத்திரிக்கை அனுப்பி விட்டேன், ஆனால் அவர் என்னை பிளாக் செய்து வைத்திருக்கிறார் என பதில் சொன்னார்.
சமீபத்தில் பாடகர் அறிவு வள்ளியம்மா பேராண்டி என்ற தலைப்பில் பன்னிரண்டு பாடல்களை வெளியிட்டு இருக்கிறார். இதில் பிளாக் பண்ணிட்டேன் என்று வரும் பாடல் சந்தோஷ் நாராயணனுக்கு பதிலடி கொடுப்பது போல் இருக்கிறது.
இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் மேடை ஏறி பேசிய இயக்குனர் ரஞ்சித் ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடலால் அறிவு ரொம்பவே கஷ்டப் பட்டதாக பேசி இருந்தார்.
கடந்த சில வருடங்களாக சந்தோஷ் நாராயணன், பா ரஞ்சித் படங்களுக்கு இசையமைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இதன் மூலம் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது.