புதன்கிழமை, ஜனவரி 15, 2025

புருடா விடுங்கள் அதுக்காக இப்படியா.. இளையராஜாவிற்கு போன் போட்ட நரேந்திர மோடி

இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மயங்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அவருடைய பேச்சுக்களும், கருத்துக்களும் பலருக்கு முரண்பாடாக தான் இருக்கும். மேலும் அவருடைய கருத்துக்களினால் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார்.

அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் முன்னுரை இளையராஜாதான் எழுதியிருந்தார். அதில் அம்பேத்கரையும், மோடியையும் ஒப்பிட்டு எழுதி இருந்தார். இது இணையத்தில் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இருந்தபோதும் இளையராஜா தன் கருத்துக்களில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால் மோடிக்கு ஆதரவாக இளையராஜா இருப்பதால் பிஜேபி பக்கம் சாய்ந்துவிட்டார் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ஏற்கனவே பல நடிகர், நடிகைகளை வளைத்துப் போடும் எண்ணத்தில் பிஜேபி செயல்பட்டு வருகிறது.

அது தமிழ்நாட்டில் மட்டும் செல்லுபடி ஆகாமல் இருந்தது. ஏனென்றால் தற்போது இங்கு திமுக ஆட்சி நடைபெற்று வருவதால் அவர்களால் நடிகர்களை வளைக்க முடியவில்லை. மேலும் 2024 தேர்தலை குறிவைத்து பிஜேபி நடிகர்களை வளைக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இளையராஜா மோடிக்கு ஆதரவாக பேசி வருவதன் பின்னணி அடுத்த ஜனாதிபதி லிஸ்டில் இளையராஜா பெயரும் இருக்கிறது என்றெல்லாம் பலரும் புருடாடாக்களை அவிழ்த்துவிட்டு வருகின்றனர். மேலும் இளையராஜாவுக்கு உயரிய விருது கொடுக்க போகிறார்கள் அதனால்தான் இப்படி பேசுகிறார் என்ற புரளியும் பரவி வருகிறது.

இதற்கெல்லாம் ஒருபடி மேலாக இளையராஜாவிற்கு மோடி போன் செய்த நன்றி தெரிவித்ததாக ஒரு பெரிய பொய்யும் உலாவி வருகிறது. அதில் தன்னைப் புகழ்ந்து நீங்கள் முன்னுரை எழுதியது என் பாக்கியம் என்றெல்லாம் மோடி கூறியுள்ளார். இவ்வாறு பல வதந்திகள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

Trending News