திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாயாவை வெற்றிபெற வைக்க நடக்கும் மிகப்பெரிய சூழ்ச்சி.. ஆதாரத்தை பார்த்தால் தலையே சுற்றுதே!

BB7 Tamil: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் யார் வீட்டிற்குள் இருந்து விளையாட வேண்டும் என்பதை முடிவு செய்வது மக்களின் ஓட்டு தான் என நம்ப வைக்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி முதல் வாரத்தில் இருந்து பார்வையாளர்களுக்கு பிடிக்காத மாயா 90 நாட்களைக் கடந்து வீட்டிற்குள் இருக்கிறார் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

மாயா பின்னும் சூழ்ச்சி வலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வசமாக சிக்கி கொள்கிறார்கள். 90 நாட்கள் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் ஒருமுறை கூட கமலஹாசன் மாயாவை எந்த ஒரு விஷயத்திற்கும் கடிந்து கொள்ளாமல் இருப்பது அவருடைய பெயருக்கே களங்கம் விளைவிக்கிறது. அதையுமே கமல் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இன்று வரை மாயாவுக்கு ஜால்ரா அடித்து வருகிறார்.

கமல் ஒரு சில எபிசோடுகளில் அந்த வாரம் முழுக்க மாயா செய்திருக்கும் தப்பை பாசிட்டிவ் ஆக மாற்றி பேசி மக்களின் மூளையை சலவை செய்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஒவ்வொரு வாரமும் மாயா வெளியேற வேண்டும் என பார்வையாளர்கள் கதறி கொண்டு இருக்கும் நேரத்தில், அவரை சுற்றி இருப்பவர்கள் தான் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

Also Read:பிக் பாஸ் வீட்டை விட்டு 90 நாட்களுக்குப் பிறகு வெளியேறிய நிக்சன்.. மஜாவாக சுற்றிய மன்மதனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் இன்று வீட்டில் இருக்கும் எட்டு பேரும் இந்த வார எலிமினேஷனுக்காக நாமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் நிலையில் மாயாவை காப்பாற்ற வெளியில் மிகப்பெரிய பிளான் நடந்து வருகிறது.

சமூக வலைத்தளத்தில் நடக்கும் சதி

மாயாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் இருக்கும் பக்கங்கள் தினமும் போஸ்ட் போடுவதற்கு விலை பேசப்பட்டு வருகிறது. ஒரு போஸ்ட்க்கு நூறு ரூபாய் முதல் இந்த பேரம் தொடங்குகிறது. மாயாவின் ரசிகை என்று சொல்லிக் கொண்டு, மாயா வெற்றி பெறுவதற்காக தன்னுடைய பணத்தை செலவு செய்ய சிலர் பயங்கரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.

BB7 Maya
BB7 Maya

இதையெல்லாம் பார்க்கும் போது மாயாவை வெற்றிபெற வைக்க வெளியில் ஒரு பெரிய கூட்டமே வேலை செய்து வருகிறது. இந்த கூட்டம் சமூக வலைத்தளத்தில் மக்களை மூளை சலவை செய்து வருகிறது. போகின்ற போக்கை பார்த்தால் மாயா, பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆக கூட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

Also Read:இன்னைக்கு தான் எனக்கு தீபாவளி.. காஜி நிக்சன் வெளியேறுவதை கொண்டாடும் அப்பா

Trending News