வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கவின் போல் எலிமினேஷனை கச்சிதமாக கணிக்கும் போட்டியாளர்.. கருநாகமாக சுற்றி வரும் சைக்கோ

Bigg Boss Kavin: பொதுவாக பக்கத்து வீட்ல ஒரு சண்டை நடக்கிறது என்றாலே ரொம்பவே ஆர்வமாக நம் வீட்டில் இருந்து மறைமுகமாக ரசித்து ரசித்து பார்ப்போம். அப்படி இருக்கும் பொழுது தினமும் நம் வீட்டில் இருந்து கொண்டே சண்டை சச்சரவு அடிதடி ரணகளமாக போய்க்கொண்டிருக்கும் நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கிறோம் என்றால் அதுவே ஒரு தனி சுகம் தான். அதை தான் தினமும் விஜய் டிவியில் உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி தரமாக செய்து வருகிறது.

அந்த வகையில் சீசன் 3 ரொம்பவே காரசாரமாக வந்து மக்களை அதிக அளவில் கவர்ந்தது. அதில் முக்கியமாக கவின் மற்றும் சாண்டியின் அட்ராசிட்டிகளை மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் சேர்ந்து பிக் பாஸ் குருநாதருக்கு தரமான சம்பவத்தை செய்திருப்பார்கள். இதில் பிக் பாஸ் வீட்டில் இருந்த முக்கால்வாசி பேர் கவினை டார்கெட் செய்தார்கள். ஆனாலும் மக்கள் இவருக்கு மட்டும் தான் அதிக ஓட்டுக்களை போட்டார்கள்.

அந்த வகையில் வீட்டிலிருந்த போட்டியாளர்களை கச்சிதமாக கணக்கு போட்டு வைத்திருந்தார் கவின். அதாவது கவின் ஒவ்வொரு முறையும் நாமினேட் பண்ணும் போது அதில் யார் ஒருத்தருக்கு அதிகமான நெகட்டிவ் கொடுத்து நாமினேட்டுக்கு அனுப்புகிறாரோ, அவர்களில் ஒருவர் தான் அந்த வர இறுதியில் எலிமினேஷன் செய்யப்பட்டார். அந்த அளவிற்கு மற்ற போட்டியாளர்களை புரிந்து வைத்திருந்தார்.

இப்படி இவர் எலிமினேஷனை கணித்தது போல தற்போது சீசன் 7லும் பிரதீப் மற்ற போட்டியாளரை ஆணிவேர் அக்கு வேற புரிந்து வைத்திருக்கிறார். அதாவது இவர் யாரை சொல்கிறாரோ அவர் அந்த வார இறுதியில் வெளியே வந்து விடுகிறார். பொதுவாக சொல்வார்களே வாயில் கருநாக்கு இருந்தா அவங்க சொல்வது பலித்திடும் என்று.

அது போல தான் பிரதீப் பிக் பாஸ் வீட்டுக்குள் கருநாகமாக இருந்து வருகிறார். இவர் சொல்வது அப்படியே நடந்து விடுகிறது. அத்துடன் கவின் எந்த அளவிற்கு வெளியில் ரொம்ப ஃபேமஸ் ஆனாரோ, அதே மாதிரி பிரதீப்பும் தற்போது அனைவரது கவனத்தையும் பெற்றுவிட்டார். அந்த வகையில் தற்போது வரை மக்களின் பேவரைட் போட்டியாளராக முதலிடத்தில் இருக்கிறார்.

எந்த இடத்தில எப்படி பேசினால் நமக்கு சாதகமாக முடியும் என்பதை தந்திரமாக யோசித்து கச்சிதமாக காய் நகர்த்துகிறார். ஆனாலும் சில விஷயங்கள் இவரிடம் புரியாத புதிராக எதற்காக இப்படி பேசுகிறார், என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இவருடைய பேச்சுக்கள் சைக்கோ தனமாக இருக்கிறது. இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தகுந்த போட்டியாளர் என்ற முத்திரையை வாங்கிக் கொண்டு வருகிறார்.

Trending News