வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இந்த விஷயத்தில் ஏமாத்திட்டாரே இசை புயல்!. ராயன் படத்தால் கிளம்பிய சர்ச்சை

AR Rahman: சினிமாவை பொறுத்த வரைக்கும் ஃபர்ஸ்ட் கிளாஸ் படம்,பிரம்மாண்ட கூட்டணி என்றால் கண்டிப்பாக அந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பார். அது மட்டும் இல்லாமல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்றாலே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகரித்து விடும்.

சமீபத்தில் ரிலீசான தனுஷ் நடித்த ராயன் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கின்றன. அதிலும் அடங்காத அசுரன் பாடல் வழக்கமான ஏ ஆர் ரகுமான் ட்ரேட் மார்க்காக மாறிவிட்டது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் என எந்த பக்கம் போனாலும்’ உசுரே நீதானே’ என்ற ஏ ஆர் ரகுமானின் குரல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த பாடல் பலரது செல்போனில் ரிங்டோன் ஆகவும் மாறிவிட்டது.

ராயன் படத்தால் கிளம்பிய சர்ச்சை

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசையில் ராயன் படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றதோடு பெரிய சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் கால்ஷீட் வாங்குவது என்பது ரொம்ப பெரிய விஷயம். அப்படி ஒரு விஷயத்தை கச்சிதமாக முடித்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் விஷ்ணு விஷால், விக்ராந்த் கூட்டணி மற்றும் கிரிக்கெட் பற்றிய படம் என ஏற்கனவே படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அத்தோடு ஏ ஆர் ரகுமானின் இசையும் சேர்ந்து ரசிகர்களின் ஆவலை தூண்டியது.

ஆனால் இந்த லால் சலாம் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மனதில் பெரிய கவனத்தை பெறவில்லை. இதுவரையிலும் அந்தப் படத்தில் என்னென்ன பாடல்கள் இருக்கின்றது என்று கூட பலருக்கும் தெரியாது. தற்போது இதை தான் பெரிய சர்ச்சையாக்கி இருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

தனுஷுக்கு பக்காவான பாட்டை கொடுத்துவிட்டு அவருடைய எக்ஸ் பொண்டாட்டிக்கு இப்படி பண்ணி விட்டாரே ஏ ஆர் ரகுமான் என கிண்டலும் கேலியும் ஆக பேசி வருகிறார்கள்.

மொட்டை தலை ராவணனாக மாஸ் காட்டும் தனுஷ்

- Advertisement -spot_img

Trending News