ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

எம்ஜிஆருக்கு ஒருபடி மேலே போன கேப்டன் புகழ்.. சமாதியில் செய்யப்படும் தரமான சம்பவம்

MGR – Vijayakanth : விஜயகாந்தின் இறப்பு மிகப்பெரிய தாக்கத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தி இருந்தது. இதற்கு காரணம் அவர் நடிகர் மற்றும் அரசியல்வாதி என்பதை காட்டிலும் நல்ல மனிதர் என்பதுதான். நடிகர் சங்க தலைவராக இருந்த போது விஜயகாந்த் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார்.

அதோடுமட்டுமல்லாமல் தன்னுடைய வீட்டுக்கு உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து சாப்பாடு கொடுத்துவிட்டு தான் அனுப்பி வைப்பாராம். விஜயகாந்துக்கு முன்னதாக எடுத்துக் கொண்டால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் ஒரு வள்ளலாகவே வாழ்ந்து வந்தார்.

அவருடைய வீட்டில் 24 மணி நேரமும் அடுப்பு எரிந்து கொண்டிருக்குமாம். எம்ஜிஆர் பாணியை விஜயகாந்த் பின்பற்றி வந்ததால் தான் கருப்பு எம்ஜிஆர் என்று கேப்டன் போற்றப்பட்டார். இந்நிலையில் எம்ஜிஆர் தாண்டி ஒருபடி மேலாகவே அவருடைய புகழ் பரவ போகிறது. அதாவது இலவசமாக மதிய உணவு விஜயகாந்த் சமாதியில் கொடுக்கப் போகிறார்களாம்.

Also Read : விஜயகாந்த் முதுகில் குத்திய வடிவேலு கலைஞர் 100 விழாவிற்கு என்டரி.. லைஃபை தொலைச்சிட்டியே பங்காளி

ஆனால் இதை கேப்டனின் குடும்பம் செய்யவில்லையாம். அதாவது அவரின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஒன்றாக முடிவெடுத்து இதை செயல்படுத்த முன்வந்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் தினமும் ஒவ்வொரு மாவட்ட தலைவர் போன்ற முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

மேலும் விரைவில் இதை செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எப்போதுமே ஏழை, எளிய மக்கள் வயிறார உண்ண வேண்டும் என்று நினைக்கும் கேப்டனின் இறப்புக்கு பின்பு இவ்வாறு ஒரு நல்ல திட்டத்தை மேற்கொள்வது பாராட்ட பட வேண்டும். தானத்தில் சிறந்த தானமான அன்னதானம் இனி கேப்டனின் பெயரில் தொடர்ந்து வழங்க உள்ளனர்.

Also Read : விஜயகாந்த் இறந்த செய்தி கேட்டு வடிவேலு என்ன செய்தார் தெரியுமா? வக்காலத்து வாங்கிய அரசியல்வாதி

Trending News