Hardik Pandya: கல்யாணம் பண்ணி இவங்கள மாதிரி வாழனும்னு நம்ம எல்லோருடைய மனசுலயும் ஒரு நட்சத்திர ஜோடி இருப்பாங்க. அவர்களுடைய சமூக வலைதள பதிவுகள் எப்போதுமே நம்மளை குஷிப்படுத்தும். அப்படி நாம் பார்த்து பார்த்து ரசித்த சில ஜோடிகள் விவாகரத்து என்று வரும் பொழுது நம்மில் பலருக்கு மனசு உடைந்து போகும்.
அப்படி சமீபத்தில் நடந்த விவாகரத்து தான் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி. இசையும் பாடலும் இரண்டற கலந்து வாழ்ந்த திருமண வாழ்வை முறித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள் இந்த நட்சத்திர ஜோடி.
இவர்களை தொடர்ந்து இப்போது மற்றும் ஒரு ஜோடி விவாகரத்துக்கு அடித்தளம் போட்டிருக்கிறார்கள். பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்று சொல்வார்கள். அது இப்போ மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
நாலு வருஷம் கூட தாங்காத பாண்டியா ஜோடி
குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா மாறியதோடு, மும்பை அணியின் கேப்டன் பதவியும் அவருக்கு கொடுக்கப்பட்டது. முந்தைய கேப்டன் ரோகித் சர்மாவை மரியாதை குறைவாக நடத்துகிறார் என பல இடங்களில் விமர்சனம் இருந்தது.
மேலும் மும்பை அணியில் இருக்கும் சில முக்கிய வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக இருப்பதாகவும் தெரிகிறது. எப்போதுமே இறுதி ஆட்டம் வரை வரும் மும்பை அணி இப்போது முதல் ஆளாக ஐபிஎல் தொடரிலிருந்து தோற்று வெளியே போய் இருக்கிறது.
இப்படி ஒரு சூழ்நிலையில் தான் ஹர்திக் பாண்டியா தன்னுடைய மனைவியையும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா செர்பிய நடிகை நடாஷாவை காதலித்து கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகனும் இருக்கிறார். இந்த தடவை ஐபிஎல் போட்டியை பார்க்க நடாஷா ஸ்டேடியத்திற்கு வரவே இல்லை. அது மட்டும் இல்லாமல் கடந்த ஆறு மாதங்களாகவே இவர்களுக்குள் எந்தவித சமூக வலைத்தள பகிர்வுகளும் இல்லை.
மேலும் நடாஷா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடாஷா பாண்டியா என்று பதிவிட்டு இருந்த பெயரில் இருந்து பாண்டியாவை நீக்கிவிட்டார். கடந்த மார்ச் மாதம் நடாஷாவுக்கு பிறந்தநாள் வந்த போதும் ஹர்திக் பாண்டியா வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது. விரைவில் இவர்களது விவாகரத்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
விவாகரத்தை ட்ரெண்டாக்கிய நட்சத்திர ஜோடிகள்
- பரஸ்பரமாக விவாகரத்து அறிக்கையை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்
- தனுஷால் திருமணத்தை முறித்த 5 நட்சத்திர ஜோடிகள்
- மோசமான தவறை நினைத்து இப்பவும் கண்கலங்கும் ரஜினி!
- சொந்த அண்ணனின் விவாகரத்திற்கு காரணமான தனுஷ்
- அமலா பால் விவாகரத்துக்கு காரணம் இதுதான்